பகல் கனவு காண்பதினால் கிடைக்கும் ஆரோக்கியம் பற்றி தெரியுமா?

335

பொதுவாகவே நமது ஊரில் பகல் கனவு காண்பவர்களை தண்டச்சோறு என்று புனைப் பெயர் வைத்து கூப்பிடுவது வழக்கம். வேலை வெட்டி இல்லாதவன் தான் பகல் கனவு கண்டு பொழுதை கழிப்பான் என்பது அவர்களது கூற்று. உங்களுக்கு தெரியுமா பகல் கனவு காண்பவர்கள் தான் சிறந்த அறிவாளிகளாம்

மற்றவர்களுடன் ஒப்பிடும் போது பகல் கனவு காண்பவர்களுக்கு அறிவுத்திறனும், படைப்பு திறனும் அதிகமாக இருக்கிறதாம். ஆசிரியர்கள், பெற்றோர்கள், வேலையிடத்தில் பணி புரியும் மேல் அதிகாரிகள் என அனைவரும் பகல் கனவு காண்பவர்களை கவனக் குறைவு உள்ளவர்கள் என குறிப்பிடுவார்கள்.

உண்மை என்னவெனில் பகல் கனவு காண்பவர்கள் எப்போதும் ஏதோ ஒரு நேர் கோட்டில், ஒரே சிந்தனையில் தான் இருப்பார்கள். இது அவர்களது படைப்பு திறனை அதிகரிக்கிறது. இது மட்டுமல்லாமல் இவர்களுக்கு மன சோர்வோ, மன அழுத்தமோ அதிகமாக ஏற்படுவது இல்லை. மேலும் இவர்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய நலன்களை பற்றி அறிந்துக் கொள்ள தொடர்ந்துப் படியுங்கள்.

உணர்வுகள்

மற்றவர்களது உணர்வுகளையும், மன நிலையையும் கணிக்க கூடிய திறன் இவர்களுக்கு இருக்கிறதாம். இதன் மூலம் யாரிடம் எப்போது என்ன வேலை கொடுக்க வேண்டும் என்பதில் சரியாக தேர்வு செய்வார்களாம் இவர்கள்

மேம்பட்ட அறிவுத்திறன்

கற்பனை திறன் மிகவும் அதிகமாய் இருக்குமாம் பகல் கனவு காண்பவர்களுக்கு. இது இவர்களது அறிவுத்திறனை மேம்படுத்துகிறதாம்.

சுயமாக கண்டுப்பிடித்தல்

இவர்கள் சுயபுத்திக்காரர்கள், யாரிடமும் உதவி ஏதும் வேண்டி நிற்காமல் அவர்களது திறனை உணர்ந்து அவர்களால் என்ன செய்ய முடியும், அதை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ளலாம், வெற்றியை அடைவது எப்படி என அனைத்தையும் சுயமாக கண்டுணரும் தன்மைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

படைப்பு திறன்

இவர்களது எல்லை இல்லாத கற்பனை படைப்புத் திறனை அதிகரிக்க உதவுகிறது. இவர்களது சிந்தனையும், யோசனைகளும் மேலோங்கி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

உயர்ந்த மன நிலை

பகல் கனவு காணும் போது யாரும் எதிர்வினையாக நினைப்பது இல்லை, இதனால் உங்களது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கிறது. இதனால் நீண்ட மகிழ்ச்சி அடையும் அவர்களது மன நிலையும் மேலோங்கியே இருக்கிறது. இதன் காரணமாய் அவர்களுக்கு மன சோர்வும், மன அழுத்தமும் ஏற்படுவதில்லை.

SHARE