பக்டீரியா எதிர்ப்புக் கூறுகள் விரைவான செயற்பாட்டைக் கொண்டவை – ஆய்வில் முடிவு .

276
Bacteria_cells_550_mini-720x480

ஒவ்வொன்றையும் சுகாதாரமானதாக பேணுவதற்காக பக்டீரியா எதிர்ப்பு பொருட்கள் நம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னுள்ள ஆதாரங்களின் படி, அவை நன்மையை விட அதிகம் தீங்கையே ஏற்படுத்தக் கூடும் என்ற ஒரு கருத்தும் இருந்து வந்தது.

தற்போதைய ஆராய்ச்சியில், பற்பசையிலிருந்து கைகழுவது வரை பொதுவாகப் பயன்படுத்தப்படும் பக்டீரியா எதிர்ப்பு பதார்த்தமாகிய Triclosan ஆனது, Zebrafish இன் உணவுக்கால்வாய் பக்டீரியாக்கள் மீது உடனடியாக தொழிற்படுவது அவதானிக்கப்பட்டிருக்கிறது.

மனித உடலும், Zebrafish உம் ஒன்றல்ல. ஆனால் Triclosan ஆல் ஆராய்ச்சிக்குட்படுத்தப்ட்டிருந்த பக்டீரியாக்கள் பல எங்களது குடல் பக்ரீரியாக்களை ஒத்தவை தான்.

Triclosan பெரும்பாலும் பக்டீரியா மற்றும் பங்கசுக்களை கொல்லவென லண்டனில் பெரிதளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அத்தோடு இது ஷம்போ, ஷோப், மவுத் வோர்ஸ், பற்பசை மற்றும் சமையல் பாத்திரங்களை சுத்தம் செய்யவென பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வகை பதார்த்தம் தோல் மற்றும் குடல் மூலம் இலகுவாக உறிஞ்சப்படக்கூடியது எனவும், சிறுநீர், பால் போன்றவற்றில் Triclosan காணப்படுவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இச்சேர்வை மனித ஓமோன்களின் செயற்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், ஈரல் புற்றுநோயை தோற்றுவிக்விக்கக் கூடியது எனவும் எலியில் மேற்கொண்ட ஆராய்ச்சியொன்றிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக ஜரோப்பாவில் இதன் பாவனை கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. மினசோட்டா மாநிலத்தில் இதன் பாவனை 2014 ஆம் ஆண்டளவில் தடைசெய்யப்பட்டிருந்தது.

ஆனாலும் லண்டனின் மற்றைய பிரதேசங்கள், மற்றைய நாடுகளில் Triclosan பாவனை இயல்பாகத் தான் இருக்கிறது.

அண்மையில் இதன் விளைவை பார்ப்பதற்கென Zebrafish பயன்படுத்தப்பட்டிருந்தது. அவற்றுக்கு Triclosan கொண்ட உணவுகள் வெவ்வேறு காலப் பகுதிகளில் அளிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டிருந்தது.

இங்கு Triclosan அளிக்கப்பட்டு நான்கு நாட்களின் பின்னரும் கூட அக் குடித்தொகைகளில் கட்டமைப்பு, குடல் பக்டீரியாக்களின் அளவு என்பவற்றில் பாரியளவில் மாற்றம் காணப்பட்டதை அவதானிக்க முடிந்திருந்தது.

SHARE