தற்போது விஞ்ஞானிகள் பக்ரீரியாக்களால் சார்ச் செய்யக்கூடிய, சிறு பாகித அளவிலான பட்டரி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
இது மிகவும் செலவு குறைவானதுடன், இலகுவாகவும் தயாரிக்கப்படக்கூடியது என சொல்லப்படுகிறது.
இந்த காகித பட்டரி மடிக்கப்படக்கூடியது. இதுவரையில் அறியப்பட்ட உயிர் பட்டரிகளில் இது சமீபத்தியது.
இவ்வகை பட்டரிகள் சேதன பதார்த்தங்களிலிருந்து உருவாகும் சக்தியை சேமிக்கக்கூடியன. இங்கு கழிவு நீரிலுள்ள பொதுவான பக்ரீரியாக்களால் சக்தி பிறப்பிக்கப்படுகின்றன.
இந்த காகித வடிவமைப்பானது புதுவகை ஆராய்ச்சி துறையின் ஒரு பகுதி. இது Papertronics எனப்படுகிறது.
இவ்வகை காகித அடிப்படையிலான இலத்திரனியல் கட்டமைப்புக்கள், சாதாரண மின் இணைப்புக்கள், பட்டரிகள் இல்லாத உலகின் ஒதுக்கப்பட்ட இடங்களில் இலகுவாக கிடைக்கப்படக் கூடியவையாக இருத்தல் வேண்டும்.
இதனால் அவ்வாறான ஒதுக்கப்பட்ட, விருத்தியடைந்துவரும் இடங்களில் அவை பயன்தரக்கூடியனவாக இருக்கும்.
இவ் பட்டரியை உருவாக்க முதலில் விஞ்ஞானிகள் சில்வர் நைதிரேற்றின் சிறு நாடாவினை மெல்லிய காகித அச்சின்மேல் இட்டார்கள். இதன் மேலாக மெல்லிய மெழுகுப் படையை இட்டார்கள். இது கதோட்டாக அதாவது பட்டரியின் நேரழுத்த முடிவிடமாக தொழிற்படக்கூடியது.
காகிதத்தின் மறுபக்கம் பல்பகுதியத்தாலான தேக்கம் ஒன்று. அது ஒருதடவை பக்ரீரியா அடங்கிய கழிவுநீரை ஊட்டும் போது அனேட்டாக அதாவது பட்டரியின் எதிர் முனையாக தொழிற்படக்கூடியது.
இந்த பட்டரி பக்ரீரியாக்களின் அநுசேபத்தின் மூலம் இயக்கப்படுகிறது. இச்செயன்முறை Cellular Respiration என அழைக்கப்படுகிறது.