பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் ஆறு மாடி கட்டிடத்தில் ஒரே இரவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 43 பேர் உயிரிழந்துடன் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டாக்காவின் பெய்லி சாலையில் உள்ள பிரபலமான பிரியாணி உணவகத்தில் வியாழக்கிழமை பிற்பகுதியில் ஏற்பட்ட தீ, விரைவில் மற்ற தளங்களுக்கும் பரவியதாக தீயணைப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறைந்தது 43 பேர் இறந்துள்ளனர் மற்றும் 22 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சர் சமந்தா லால் சென் நேற்று (01.03.2024) அதிகாலை டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற பின்னர் தெரிவித்துள்ளார்.
“கடுமையான தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட 22 பேரும் ஆபத்தான நிலையில் உள்ளனர்” என்று சுகாதார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
13 தீயணைப்புப் பிரிவுகளின் இரண்டு மணி நேர முயற்சிக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதோடு, தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று தீயணைப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிர் பிழைத்தவர் முகமது அல்தாப், செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“முன்பக்கத்தில் தீப்பிடித்து கண்ணாடி உடைந்ததும், எங்கள் காசாளர் மற்றும் பணியாளர்கள் அனைவரையும் வெளியேற்றினர்.
ஆனால் இருவரும் பின்னர் இறந்தனர். நான் சமையலறைக்குச் சென்று, ஜன்னலை உடைத்து, என்னைக் காப்பாற்றிக் கொள்ள குதித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.