பசிலின் விருப்பத்திற்கமைய ரணில் எடுக்கும் முக்கிய தீர்மானங்கள்…

601

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமையுடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதில் தடைவிதிக்கப்படாவிடின் நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தீவிரமடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் பொருளாதார நெருக்கடியும்,அரசியல் நெருக்கடியும் தீவிரமடைவதற்கு முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பொறுப்புக்கூற வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.

பசிலின் விருப்பத்திற்கமைய ரணில் எடுக்கும் முக்கிய  தீர்மானங்கள்

 

முன்னாள் பிரதமர்  மகிந்த ராஜபகச் தலைமையிலான அரசாங்கத்தின் தன்னிச்சையான தீர்மானங்களின் காரணமாக அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்தது. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் மக்களாணைக்கு முரணாக செயற்பட்ட கூட்டணியில் இருந்து 11 அரசியல் கட்சிகளும் வெளியேறி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகிறோம்.

சர்வகட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் யோசனைக்கு பிரதான எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவிக்காத காரணத்தினால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் அரசியல் ஸ்தீரத்தன்மை பேணப்பட வேண்டும் என்பதால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்தோம். நிபந்தனையற்ற எமது ஆதரவை அரசாங்கம் தவறான முறையில் பயன்படுத்திக்கொள்ள கூடாது.

பசிலின் விருப்பத்திற்கமைய ரணில் எடுக்கும் முக்கிய  தீர்மானங்கள்

 

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட்டு 19ஆவது திருத்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், 21ஆவது திருத்தம் விரைவாக செயற்படுத்தப்பட வேண்டும் என்ற பொது கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம்.

இரட்டை குடியுரிமையுடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்த அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பது எமது பிரதான கோரிக்கையாக உள்ளதுடன், மக்களின் பிரதான எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

21ஆவது திருத்தத்தில் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாவிடின் நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தீவிரமடையும் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச விருப்பத்திற்கமையவே தற்போதைய ரணில்  அரசாங்கத்தில் முக்கிய தீர்மானங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை கவலைக்குரியது என தெரிவித்துள்ளார்.

SHARE