7–வது ஐ.பி.எல். போட்டியில் இன்று 2 ஆட்டம் நடைபெறுகிறது.
மாலை 4 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்– ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ராஜஸ்தான் அணி 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளன. அந்த அணி 8–வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. மும்பையை வீழ்த்துவதன் மூலம் அந்த அணி ‘பிளேஆப்’ சுற்றை நோக்கி முன்னேறும். சிறந்த வீரர்களை கொண்ட அந்த அணி இந்த ஐ.பி.எல். போட்டியில் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறது. மும்பை அணி ஏற்கனவே ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. 3 வெற்றி, 7 தோல்வியுடன் அந்த அணி 6 புள்ளிகள் பெற்றுள்ளது.
இரவு 8 மணிக்கு டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்– பீட்டர்சன் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.
பஞ்சாப் அணி இதுவரை 2 ஆட்டத்தில் மட்டுமே தோற்று இருக்கிறது. 8 வெற்றியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளன. சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட பஞ்சாப் அணி 9–வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
டெல்லி அணி 3–வது வெற்றியை பெற கடுமையாக போராடும்.