படகுகளை மீட்க தமிழக மீனவர்கள் இலங்கை வருகை

349
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்பதற்காக 79 பேரை கொண்ட தமிழக மீனவர்கள் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது.

இந்த குழு நேற்றைய தினம் இலங்கைக்கு வந்துள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதுக்கோட்டை, கோட்டைப்பட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய குறித்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி  மீனவர்களின் வாழ்வாதாரமாக கருதப்படும் படகுகளை அவர்களிடம் மீள ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்தமையையடுத்து தமிழக மீகவர்களின் படகுகளை திருப்பியனுப்புமாறு உத்தரவிட்டார்.

இதன்படி கோட்டைபட்டினத்தை சேர்ந்த 15 விசை படகுகளில் 12 படகுகளும், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 9 விசைபடகுகளில் 7 படகுகளும், மேலும் இரு நாட்டு படகுகளும் ஒப்படைக்கப்படவுள்ளன.

இதேவேளை காரைக்கால் மீனவர்களின் படகுகளை மீட்பதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என அந்நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE