படத்துக்கு படம் பல கோடி சம்பளம் பெறும் நடிகர் அல்லு அர்ஜுனின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

117

 

தெலுங்கு சினிமாவில் இப்போது இளம் நடிகர்கள் தான் ராஜ்ஜியம் செய்து வருகிறார்கள், அதிலும் மெகா குடும்பத்தில் இருந்து பலரும் கலக்கி வருகிறார்கள்.

அப்படி தெலுங்கு சினிமாவில் 21 ஆண்டுகள் வெற்றிகரமாக ஹீரோவாக இருந்து வருகிறார் அல்லு அர்ஜுன். அண்மையில் அவரின் முழு உருவ மெழுகுச் சிலை துபாயில் உள்ள மேடம் துஸாண்ட்ஸ் மியூசியத்தில் திறக்கப்பட்டது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியான வெளியான புஷ்பா திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. அடுத்த படத்தின் அப்டேட்டுகளும் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்த புஷ்பா படத்திற்காக சிறந்த நடிகர் என்ற தேசிய விருதை கூட பெற்றிருந்தார் நடிகர் அல்லு அர்ஜுன்.

சொத்து மதிப்பு
மெகா குடும்பத்தில் இருந்து நடிக்க வந்த அல்லு அர்ஜுன் படத்துக்கு படம் பல கோடி தனது சம்பளத்தை ஏற்றிக்கொண்டே வருகிறார். அவரது சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ. 460 கோடி என கூறப்படுகிறது.

அவரது ஆண்டு வருமானம் ரூ. 90கோடியாம், ஒரு படத்துக்கு அவர் ரூ. 65 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

தற்போது நடித்துவரும் புஷ்பா 2ம் பாகத்திற்காக அவர் ரூ. 100 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

SHARE