திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுந்தரராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். ஊடக அமையம் மற்றும் வடக்கு, கிழக்கு கொழும்பு ஊடக அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முதல் நிகழ்வாக யாழ். பிரதான வீதியில் உள்ள ஊடகவியலாளர் நினைவு தூபிக்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் அதிரன் மற்றும் கொழும்பு ஊடக அமைப்பினை சேர்ந்த பெடி ஹமகே ஆகியோரால் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து ஊடகவியலாளர் சுகிர்தராஜனுடன் பணியாற்றிய சக ஊடகவியலாளர் ஜெககேஸ்வரன் பொதுச்சுடரை ஏற்றி வைத்து ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் குற்றவாளிகளுக்கு எதிராக விசாரணையை வலியுறுத்தியும் கோசங்கள் எழுப்பப்பட்டன.