வருண் தவான், அலியா பட், சித்தார்த் சுக்லா ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் வருகிற 11-ஆம் தேதி இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தை கரண் ஜோஹர் தயாரிப்பில் ஷஷாங்க் கெய்த்தான் இயக்கியுள்ளார். சச்சின் ஜிகர் மற்றும் டோஷி சபரி இசையமைத்துள்ளார்.
நடிகை அலியாபட் தனது முந்தைய படமான 2 ஸ்டேட்டஸ் படத்தில் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.அதுபோல் இந்த படத்தில் படுசெக்ஸியான படுக்கையறை காட்சியில் நடித்துள்ளாராம். இந்த காட்சி குறித்து நிருபர்கள் கேட்டபோது, ‘படுக்கையறை காட்சியை மட்டும் குறிப்பிட்டு ஏன் கேள்வி கேட்கின்றீர்கள். உங்கள் எல்லோருக்கும் படுக்கையறையில் என்ன நடக்கும் என்பது தெரியும்தானே? தெரிந்த ஒன்றை திரையில் காண்பிக்கின்றோம். இதில் என்ன தவறு? என்று புரட்சிகரமான ஒரு பதிலை கூறி நிருபர்கள் உள்பட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.