டிடி, தமிழ் சினிமாவில் யாராலும் மறக்க முடியாத ஒரு தொகுப்பாளினி.
20 வருடங்களுக்கும் மேலாக தொலைக்காட்சியில் ராஜ்ஜியம் செய்து வருபவர், இவர் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களுக்கு அவ்வளவு பிடிக்கும்.
நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சியை நடத்துவதோடு மிகவும் கலகலப்பாக பார்ப்போரையும் ஆர்வமாக பார்க்க வைப்பார். அந்த அளவிற்கு அவரது தொகுப்பாளினி வேலையை செமயாக செய்துள்ளார்.
ஆனால் இவர் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்தவில்லை, இது ரசிகர்களுக்கு பெரிய சோகத்தை தான் கொடுத்துள்ளது.
பிரபலத்தின் பேட்டி
அண்மையில் ஒரு பேட்டியில் தொகுப்பாளினி டிடி தனது தொகுப்பாளினி பயணம், உடல்நிலை குறித்து பேசியுள்ளார். டிடி காபி வித் டிடி நிகழ்ச்சியை கேட்டு தான் வாங்கியிருக்கிறார்.
எனக்கு ஒரு புது நிகழ்ச்சி தாருங்கள் அதற்கு ஒரு வாரம் மட்டும் டைம் தாருங்கள் அதில் என்னுடைய பெஸ்டை நான் கொடுக்கிறேன். மக்களுக்கோ உங்களுக்கோ பிடிக்கவில்லை என்றால் அந்த நிகழ்ச்சியை நிறுத்திவிடாம் என்று அவர் கேட்டிருக்கிறார்.
பின் நிகழ்ச்சி செம ஹிட்டாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைய டிடி விஜய் டிவியின் முக்கிய பிரபலமாக மாறி இருந்தார்.
மேலும் நம்முடைய உடல்நிலை நன்றாக இருந்தால்தான் நம்மால் அடுத்தடுத்து வேலைகளை பார்க்க முடியும். நாம் ஆரோக்கியமாகவும் நம்மால் ஒரு காரியம் ஆகிறது என்றால் தான் நம்மை ஒரு இட்த்தில் வைத்திருப்பார்கள்.
நம்மால் முடியவில்லை என்றால் அங்கிருந்து தூக்கி வீசப்படுவோம் என்பது என்னுடைய வாழ்க்கையில் நான் லேட்டாக கற்றுக் கொண்டேன். அதிக நேரம் நின்றுகொண்டே நான் ஆங்கரிங் செய்து கொண்டிருப்பதால் காலில் வலி அதிகமாகி இருந்தது.
அதற்கு முதலில் ஒரு ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனால் அது தவறாக செய்யப்பட்டதால் மீண்டும் எனக்கு வலி வந்து விட மீண்டும் அந்த இடத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.
ஆனால் அது பயனளிக்கவில்லை இப்போது வரைக்கும் நான் அந்த வலியோடு தான் நிற்கிறேன். அதனாலேயே நான் அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என கூறியுள்ளார்.