படையினரின் போர் வெற்றியினை நினைவுகூரும் வகையிலான அணிவகுப்பு முல்லைத்தீவு நகர்பகுதியில் நடைபெற்றுள்ளது

279

படையினரின் போர் வெற்றியினை நினைவுகூரும் வகையிலான படை அணிவகுப்பு ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர்பகுதியில் நடைபெற்றுள்ளது.

போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் போரில் வெற்றியினை நினைவிற்கொள்ளும் வகையில் போரில் உயிரிழந்த படையினருக்கு மரியாதை செய்யும் வகையிலும் படையினரின் அணிவகுப்பு ஒன்று முல்லைத்தீவு நகர்பகுதியில் இன்று காலை நடைபெற்றது.

முல்லைத்தீவு நகர் பகுதியில் நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள 59 ஆவது படையினரின் 591 ஆவது பிரிகேட் தலைமையத்தில் இருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பு முல்லைத்தீவு நகர் பகுதி சுற்றுவட்ட பாதை ஊடாக கடற்கரை வரை சென்றடைந்து பின்னர் அங்கிருந்து கடற்கரை வீதியாக முல்லைத்தீவு இராஜப்பர் தேவாலயம் வரை சென்றடைந்துள்ளார்கள்.

SHARE