பட்ஜெட் விலையில் Amazon அறிமுகம் செய்யும் டேப்லட்

369
Amazon நிறுவனம் நேற்றைய தினம் Amazon Fire எனும் 7 அங்குல அளவுடைய திரையினைக் கொண்ட டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது.
மேலும் இதன் திரையானது 1024 x 600 Pixel Resolution உடையதாகவும் IPS தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.தவிர 1.3 GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad-core Processor, பிரதான நினைவகமாக 1GB RAM, 8 GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இவற்றுடன் 2 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான VGA கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

இதன் விலையானது 50 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

SHARE