பணத்தை பதுக்கி வைத்திருக்கும் விவகாரம்: பதிலளிக்க முடியாமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரதமர் (வீடியோ இணைப்பு)

422
பணத்தை பதுக்கி வைத்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்காமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஐஸ்லாந்து பிரதமரின் செயல் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் ஞாயிற்றுக்கிழமை ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.

அதில், உலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின், சீன அதிபர் மற்றும் சிரியா அதிபர் ஆகியோரது பெயர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக ஐஸ்லாந்து பிரதமர் சிக்முண்டூர் டேவிட் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேரடி பணப் பதுக்கலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேவிட் மற்றும் அவரது மனைவி இருவரும் பிரித்தானியாவின் விர்ஜின் தீவுகள் கடற்கரையை ஒட்டிய நிறுவனம் ஒன்றினை வாங்கியதற்கான ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஐஸ்லாந்தின் பொருளாதாரம் சரிந்து முடங்கிய நிலையில் தவித்துகொண்டிருந்தபோது தனிப்பட்ட முறையில் பிரதமர் சிக்முண்டூர் மற்றும் அவரது மனைவி பணப் பதுக்கலில் ஈடுபட்ட சம்பவம் பெறும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது இது தொடர்பான கேள்வியை சிக்முண்டூரிடம் நிருபர் கேட்டுள்ளார்.

அதற்கு பதில் சொல்ல முடியாமல் தவித்த சிக்முண்டூர் மழுப்பல் பதிலையே அளித்தார். எனினும் நிருபர் விடாமல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் வைத்து கேள்விக்கேட்டுள்ளார்.

இதனை சமாளிக்க முடியாததால் உடனடியாக சிக்முண்டூர் அங்கிருந்து வெளியேற முயன்றார்.

மேலும், தன் மீது வீண் குற்றச்சாட்டை வைக்க முயற்சிக்கின்றனர் என கூறியபடி அங்கிருந்து வெளியேறினார்.

இதற்கிடையில் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் அவருக்கு எதிராக மாபெரும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.எனினும் பதவி விலகும் எண்ணமே இல்லை என்று சிக்முண்டூர் தெரிவித்துள்ளார். இதனால் ஐஸ்லாந்தில் பதற்றமாக நிலை ஏற்பட்டுள்ளது.

SHARE