பண்டாரநாயக்காவை கொலைசெய்த பௌத்த பிக்குகள் மைத்திரிபால சிறிசேனவையும் கொலைசெய்யக்கூடும்.

467

இவ்வருடம் இடம்பெற்ற இலங்கையின் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள மைத்திரிபால சிறிசேன அவர்கள், வரலாற்று ரீதியாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடமாகாண சபை உறுப்பினர்களையும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உட்பட ஏனைய உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடிய விடயம் மகிழ்ச்சி தரும் அதேநேரம், இதனது பின்னணிகளை பார்க்கின்றபொழுது, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை மையப்படுத்தியே மைத்திரிபால சிறி சேனவின் வடக்கு விஜயமும், அபிவிருத்திக்குழுவின் கூட் டமும் அமைந்துள்ளது என ஆய்வாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், நான் இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு தேர்தலில் போட்டியிடுவதற்காக வாக்குக் கேட்டு வந்தேன். ஆனால் இன்று ஜனாதிபதியாக வந்துள்ளேன். என்னை வெற்றியடையச் செய்தமைக்கு வடக்கு மக்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த நாட்டில் இனம், மதம் என எதுவும் இன்றி மக்களைப் பாதுகாப்பதே எனது நோக்கம். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும். நாடாளுமன்றம், மாகாண சபை என்பன இதற்கு முக்கியமான நிறுவனங்களாக உள்ளன. இங்கு உரையாற்றியவர்கள் கல்வி, சுகாதாரம், காணிப்பிரச்சினை, நிலவிடுவிப்பு பற்றிக் கூறியுள்ளார்கள்.

காணிப்பிரச்சினையை தீர்க்க குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கான பொறுப்பு சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் சிறப்பாக செயற்பட்டு வருகின்றார். எனவே யுத்தத்தின் போது இராணுவத்தினால் பெறப்பட்ட காணி கள் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல, கொழும்பிலும் எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அலரிமாளிகைக்கு எனவும் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றை விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றேன். வடக்கு மாகாணத்திற்கு சிவில் ஆளுநர் வேண்டும் என நீண்ட நாளாக கேட்டு வந்தீர்கள். ஆனாலும் அவை இடம்பெறவில்லை. நானும் பல தடவை முன்னைய ஜனாதிபதிக்கு கூறினேன். ஆனால் செயற்படுத்தப்படவில்லை. அவ்வாறு ஆளுநர் மாற்றப்படாத காரணத்தினால் தான் நான் இன்று ஜனாதிபதியாக வெற்றிபெற்றேன்.

இன்று அந்த நிலை மாற்றப்பட்டு சிவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் மீனவர்களின் பிரச்சினை குறித்தும் நான் நன்கு அறிவேன். இவற்றுக்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். எமது நாட்டில் நூற்றுக்கு ஆறு வீதமானவர்கள் வேலை இன்றி உள்ளனர். கடந்த 3 வருட காலமாக பட்டதாரிகள் வேலையின்றி உள்ளதை அறிவேன். அவர்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன். கடந்த 5 வருட காலமாக நான் சுகாதார அமைச்சராக பணியாற்றிய காரணத்தினால் வைத்தியசாலைகளில் இருக்கும் பதவி வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கமத்தொழிலில் இருக்கும் குறை பாடுகள் குறித்தும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு விவசாயிகள் அனைத்து நாட்டுக்கும் உதாரணமானவர்களாக உள்ளதை நாங்கள் அறிவோம். தேசிய வருமானத்திற்கு வடக்கு விவ சாயிகள் பெரிதும் உழைக்கின்றனர். எனவே அவர்களது பிரச்சினைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் குடிநீர்ப்பிரச்சினையும் இங்கு காணப்படுகின்றது. அதனை வெளிநாடுகளுடன் பேசித் தீர்க்க நடவடிக்கை எடுப்போம். அடுத்து வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போரில் 80 ஆயிரம் விதவைகள் உள்ளனர் என எனக்கு அறிக்கை இடப்பட்டுள்ளது. இது போல தெற்கிலும் உள்ளனர். இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த விசேட செயற்றிட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. 100 நாள் வேலைத்திட்டம் பற்றி வாராந்தம் கலந்துரையாடி, அவற்றைச் செயற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடி வருகின்றோம்.

எதிர்வரும் நாட்களில் எமது அமைச்சர்களை அடிக்கடி அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அரசியல் தலைமைத்துவம், வடக்கு மாகாணசபை, உள்ளுராட்சி சபையி னர் இங்குள்ள அபிவிருத்திகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இரும்பு மண் என்பவற்றால் மக்களை சேர்க்க முடியாது. எனவே வடக்கு, கிழக்கு, தெற்கு மக்களை உள்ளங்களால் ஒன்று சேர்க்க நடவடிக்கை எடுப்பேன். அனைவரும் பயம், சந்தேகம் இல்லாது சகோதரர்களாக வாழ வேண்டும். எங்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கையுடன் செயற்பட்டு அனைவரும் ஒரே நாடாக இருந்து செயற்படுவோம். பாதுகாப்பு விடயத்தில் அனை வரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். தீர்க்கப்படாதவற்றை தீர்க்க வேண்டும். வறுமையினை இல்லாது ஒழிக்க வேண்டும். மக்களது பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் வடக்கிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியது போல, தெற்கிலும் ஒற்றுமையுடன் பேசி எமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வோம் என தெரிவித்தார். இவ்வாறு மைத்திரிபால சிறிசேனவின் வடக்கு விஜயத்தின் போதான கருத்துக்கள் அமையப்பெற்றிருந்தன.

இது இவ்வாறிருக்க, அப்போதைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்காக திருகோணமலை யில் தந்தை செல்வா, மாநாடு ஒன்றினை ஒழுங்குசெய்தார். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற இலங்கையரசிற்கு ஓராண்டுகால அவ காசம் வழங்கினார். 1957, ஜூலை 26இல் அரசு ஒரு சமாதானத்திற்கு வந்து பண்டா-செல்வா ஒப்பந்தத்தினை செய்துகொண்டது. அதில் அரசி னால் கூறப்பட்ட வாக்குறுதிகளாக, தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை அரசு கைவி டும். தமிழ் மொழியும் அரசு மொழி யாக சட்டம் நிறைவேற்றப்படும். தமிழ், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் பிரதான மொழியாக இருக்கும். பிராந்திய சுயாட்சி மூலம் பிராந்திய சுய சட்டங்கள் வகுக்கப்படும் போன்றன அதில் அடங்குகின்றனது.

இதனை எதிர்த்த ஜே.ஆர். ஜெயவர்த்தன, பண்டாரநாயக்காவின் இல்லத்திற்கு நடைபயண மும் மேற்கொண்டார். இதன் விளைவாக தமிழ் ஆட்சி மொழியா னதே தவிர, ஏனைய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 1958இல் தமிழர் பிரதேசங்களிலும் வாகனத்தகட்டில் சிங்கள எழுத்து பயன்படுத்தப்படவேண்டும் என அரசு கூறியது. தமிழர்கள் இதனை தார்கொண்டு மறைத்தனர். இதனால் மே.25இல் தமிழர்களுக்கு எதிராக கலவரங்கள் ஆரம்பித்தது. பொல னறுவையில் ஆரம்பித்து கொழும்பு, யாழ்ப்பாணம் என பரவி 400 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து பண்டார நாயக்கா தமிழர் பகுதிகளில் தமிழை மட்டும் பயன்படுத்த ஒப்புக்கொண்டார். இதனை எதிர்த்து பௌத்த பிக்குகள் அவரின் வீட்டிற்கு முன் போராட்டங்களை நடாத்தி, அவரை சிங்கள எதிரி என சித்தரித்து, பண்டா-செல்வா ஒப்பந்தத்தை கைவிடவும் வலியுறுத்தினர். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டு பாராளுமன்றத்திலும் அதனையே அறிவித்தார். இதனை எதிர்த்த தமிழர்களை இனவாதிகள் தாக்கினர். எங்கும் கலவரம், கொலை. 1959ம் ஆண்டில் நிலைமைகள் கட்டுக்கடங்காமல் போக, எதிர்ப்புக்களை மீறி மேற்கூறப்பட்ட ஒப்பந்தங்களை அமுல்படுத்த பண்டாரநாயக்கா முனைந்தார். செப்டெம்பர்.25 இல் சோமராம தேரர் என்ற பௌத்த பிக்குவால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதேபோன்றதானதொரு நிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் இனத்திற்கான கருத்துக்களை கையாண்டு, 100நாட்கள் என்ற வேலைத் திட்டத்தினையும் அமுல்படுத்தியுள்ள நிலையில், இதனை எதிர்க்கும் முகமாக கண்டி தலதாமாளிகையின் வளாகத்தில் இலங்கையின் தேசியக்கொடிக்கு பதிலாக தனிச்சிங்களக் கொடியினை பௌத்த பிக்குகள் ஏற்றி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளனர். சிவப்பு மற்றும் செம்மஞ்சள் நிறங்கள் சிறுபான்மை இனத்தினைக் குறிப்பதாகவே அமைகின்றது.

இவ்வாறானதொரு சம்பவமென்பது தமிழினத்திற்கு ஒரு விடிவினை பெற்றுக்கொடுக்க இவர்கள் விரும்பவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. இதனால் அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு பொலிஸார் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இலங்கையின் நான்காவது பிரதமராகவிருந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, ஜனவரி 8, 1899 – செப்டெம்பர் 26, 1959) பிரதமராக பதவி வகித்த போது பௌத்த பிக்கு ஒரு வரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இது சிங்கள இனவாதிகளாலேயே இப்படுகொலை மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து நாம் ஒரு விடயத்தினை பார்க்கவேண்டும். தமிழ்பேசும் மக்களுக்கு சுதந்திரத்தினை பெற்றுக்கொடுக்கும் எந்த சிங்கள ஆட்சி யாளர்களாகவிருந்தாலும் அவர் களின் நிலைமைகள் இவ்வாறே அமையப்பெறும்.

இந்த சவால்களுக்கு முகங்கொடுத்து மைத்திரிபால சிறி சேன, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றோர் செயற்படுவது எவ்வகையில் என பலராலும் கேள்வி எழுப்பப்படுகின்றது. இதய சுத்தியுடன் இவர்கள் செயற்படுவார்களாகவிருந்தால் அது வரவேற்கத்தக்கது. இவர்களின் உரையினை நம்பியும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு புகழ்ந்து பேசியுள்ளது. ஆகவே தமிழ்பேசும் மக்களாகிய நாம், இந்த வரலாறு களை புரட்டிப்பார்க்கும் காலத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம். அதி காரத்தினை கையில் வைத்துக்கொண்டு பலதரப்பட்ட பேச்சுக்களை நடாத்தியபோதிலும் அனைத்தும் தோல்வியில் நிறைவடைந்தன.

அஹிம்சை வழியிலான போராட்டங்களில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் எவ்வாறு தமிழ்மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கப்போகின்றார்கள் என்பது சந்தேகங்களையே ஏற்படுத்துகின்றது. ஆகவே எதிர்வரும் காலங்களில் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுக ளின் ஒரு மத்தியஸ்தத்தினை ஏற்படுத்தி, அதன் ஊடாக தமிழ் மக்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளமுடியுமே தவிர, சிங்கள இனவாத அரசின் நயவஞ்சக பேச்சுக்கு தலை சாய்ந்து போவோமாகவிருந்தால் தமிழ் மக்களுடைய தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமைகள் அனைத்தும் குழிதோண்டிப்புதைக்கப்படும் நிலை மைகள் தோன்றும்.

– இரணியன் –

 

 

 

 

 

 

 

SHARE