பண்டாரவளைப் பகுதியின் பனாகல – கொந்தகெல பிரதான பாதையருகில் வடிகானொன்றிலிருந்து இரு கைக்குண்டுகள் இன்று காலை மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட குறித்த கைக்குண்டுகள் தியத்தலாவை இராணுவ முகாமின் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டது.
இந்நிலையில் பண்டாரவளைப் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையென பொலிஸார் மேலும் தெரிவித்துள்னளர்.