பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு! வெளியாகியுள்ள அறிக்கை…

295

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி செயகத்தால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எரிவாயு கப்பல் இன்று பிற்பகல் நாட்டிற்கு வந்தவுடன் எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு! வெளியாகியுள்ள அறிக்கை | President Gotabaya Rajapaksa Has Ordered Officials

இலங்கைக்கு வரவுள்ள கப்பல்

3700 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று பிற்பகல் 3 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக அந்த கப்பல் இலங்கையை வந்தடைய தாமதமாகியுள்ளது.

அதேவேளை நாளைய தினமும் மற்றும் எதிர்வரும் 16ஆம் திகதியும் மேலும் 3700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதவி விலகுவதாக அறிவித்த ஜனாதிபதி

நாட்டில் நேற்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக் கோரி மிகப்பெரும் போராட்டங்கள் பதிவாகியிருந்த நிலையில் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் என்பன போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தன.

இந்த நிலையில் எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery

SHARE