‘பதவி தருவதை வைத்துக்கொண்டு’ சிறீலங்கா ஆட்சியாளர்கள் மனசு மாறிவிட்டனர் என்று கூறிவிடமுடியாது! மாவைக்கு சாள்ஸ் சாட்டை!(வீடியோ)
வவுனியா தமிழரசுக்கட்சியின் தாயகம் அலுவலகத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் சாள்ஸ் மற்றும் சாந்தியை வரவேற்று 05.09.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை.சேனாதிராசா,
‘எதிர்க்கட்சி தலைவர்’ மற்றும் ‘பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளர்’ பதவிகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு தந்ததன் மூலமாக, சிறீலங்கா ஆட்சியாளர்களின் மனங்கள் மாறி விட்டன என்பது தெட்டத்தெளிவாக தனக்கு விளங்குவதாக தெரிவித்தார்.