பதவி விலகத் தயாராகும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள்

431

சமகால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைந்துள்ளனர்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலியை உடன் பதவி விலக்குமாறு கோரி நாடு பூராகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்றுகூடிய கலந்துரையாடல் மேற்கொண்டனர்.

இதன்போது அரசாங்கம் முஸ்லிம்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை சலகரும் ஏற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதிப்படுத்தும் அமைச்சர்கள் கூட்டாக பிரதமரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை ஒப்படைக்க அலரி மாளிகைக்கு சென்றுள்ளதாக தெரிய வருகிறது.

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவி, இராஜாங்க அமைச்சுப் பதவி, பிரதியமைச்சுப் பதவி, ஆளுநர் பதவி ஆகியவற்றையே இராஜினாமா செய்யவுள்ளனர்.

எனினும் அமைச்சர்களின் ராஜினாமா கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை அடுத்து முஸ்லிம் அமைச்சர்கள் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளதாக தெரிய வருகிறது.

SHARE