பதினாறு வயது சிறுவன் வன்னிப் பொடியனா? கொஞ்சம்கூட சிரிக்க தோனலயா?

540

 

கடந்த சில மாதங்களாக ‘வவுனியா பொடியன் என்ற பெயரில் முகப்புத்தக (பேஸ்புக்) கணக்கொன்றை இயக்கிவந்ததாகக் கூறப்படும் 16 வயதுச் சிறுவன் ஒருவனை வவுனியா, தோணிக்கல்லில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு கைதுசெய்ததாக  பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சிறுவன் ‘வவுனியா பொடியன்’ என்ற பெயரில் வவுனியாவைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள், சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், சமூகத்தில் அறியப்பட்ட பலரையும் அவர்களின் புகைப்படங்களுடன் பிரசுரித்து கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி விமர்சித்து வந்திருந்ததாக தெரியவருகின்றது. இது தொடர்பில்  பொதுமக்கள் தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, மேற்படி கிராம அலுவலகர் மூலமாக வவுனியா பொலிஸாரிடம்  இந்தச் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். இந்த நிலையில், இந்தச்  சிறுவனை கைதுசெய்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

வவுனியாவை சேர்ந்த 16 வயதுச் சிறுவன் பேஃஸ் புக்கில் மாட்டியது எப்படி ? உண்மையில் நடந்த சம்பவம் என்ன ? வவுனியா தோணிக்கல் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர், என்றும் அச்சிறுவன் “வவுனியா பெடியன்” என்று ஒரு பேஃஸ் புக் கணக்கை வைத்திருந்தார் என்ற செய்தியும் ஊடகங்களில் ஏற்கனவே வெளியாகி இருந்தது. குறித்த இச் சிறுவன் சமூக விரோதிகளையும் சில அரசியல் வாதிகளையும் திட்டி எழுதியிருந்ததாகவும் அவர்கள் மேல் அவதூறு பரப்பும் நோக்கில் இச்சிறுவன் எழுதியதாகவும் பொலிசார் தெரிவித்ததாக செய்திகள் எழுதப்பட்டுள்ளது.

இதில் நாம் ஒரு விடையத்தை இங்கே பார்கவேண்டும். குறித்த சிறுவன் எழுதியதாக கூறப்படும் நபர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனும் அடங்குகிறார். பல ஆரசியல் விமர்சனங்களும் இவர் பேஃஸ் புக் கணக்கில் முன்வைக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் உள்ள ஒரு 16 வயது நிரம்பிய சிறுவனுக்கு இந்த துணிச்சல் எங்கிருந்து வந்தது ? 16 வயதுச் சிறுவனுக்கு அரசியல் ஞானம் எங்கிருந்து வந்தது ? இவர் முக நூலில் எழுதியுள்ள அரசியல் விமர்சனத்தை வாசித்தால், நிச்சயம் ஒரு 16 வயதுடைய சிறுவன் இப்படி எழுதி இருக்க முடியாது என்பதனை அனைவரும் உணருவார்கள். அத்தோடு இச்சிறுவன் ஒன்றும் ஊடகம் தெரிந்தவனும் அல்ல. கம்பியூட்டரில் தமிழில் டைப் அடிக்கவே இவருக்கு தெரியாது என்பது தான் உண்மையாகும்.

ஆனால் இவரை ஏன் பொலிசார் கைதுசெய்தார்கள் என்று கேட்க்கிறீர்களா ?  அரசியல் வாதிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் கொடுத்த முறைப்பாட்டை அடுத்தே, குறித்த பேஃஸ் புக் கணக்கை முடக்க பொலிசார் முனைந்துள்ளார்கள். இச்சிறுவனின் பேஃஸ் புக் கணக்கை யாரோ பிழையாக பயன்படுத்தி இருக்கலாம், இலையென்றால் இது பொலிசாரின் ஒரு கண் துடைப்பு நாடகமாக இருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். வெளியாகியுள்ள போட்டோ கூட உண்மையான போட்டோ அல்ல என்றும், இதில் உள்ள சிறுவன் தான் வவுனியா பெடியன் என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றும் வவுனியாவில் உள்ள மக்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். 

TPN NEWS

SHARE