பதின்மூன்று சிறுமிகளை சீரழித்த ஒரு காமுக கொலைகார சீடனின் ஆட்சியில் சரண்யா, வித்தியா போன்ற சிறுமிகளுக்கு பாதுகாப்பு எப்படி கிடைக்கும்??

376

 

பதின்மூன்று  சிறுமிகளை  சீரழித்த  ஒரு காமுக கொலைகார  சீடனின்  ஆட்சியில் சரண்யா,  வித்தியா போன்ற சிறுமிகளுக்கு பாதுகாப்பு எப்படி கிடைக்கும்??

நாமும் நமது சமூகமும் எப்போதும் புனிதமாக இருப்பதாகவே போதிக்கும்வரை இந்த போக்கிரிகளுக்கும் பொறுக்கித்தனங்களுக்கும் குறைவிருக்கபோவதில்லை.

யாழ்.புங்குடுதீவு ஆலடி சந்திப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

tevu1  பதின்மூன்று  சிறுமிகளை  சீரழித்த  ஒரு காமுக கொலைகார  சீடனின்  ஆட்சியில் சரண்யா,  வித்தியா போன்ற சிறுமிகளுக்கு பாதுகாப்பு எப்படி கிடைக்கும்?? tevu1புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை சேர்ந்த சி.வித்தியா (வயது18) என்ற உயர்தர வகுப்பு மாணவியே கடந்த 14ம் திகதி(மே-2015) பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்செய்தியானது வடக்குமாகணமெங்கும் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. இம்மிலேச்சத்தனமான படுகொலையையிட்டு வடக்கின் பல பிரதேசங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களிலும் சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சமூகநல அமைப்புகளும் பிரபல அரசியல் கட்சி தலைவர்களும் தத்தமது கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் இந்நிலையில் எல்லாவித செய்தி ஊடகங்களும் முகனூல் பதிவாளர்களும் இந்த மாணவியின் கொலை தொடர்பாக பல கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

pundudu-manavi-rapist-001-copie  பதின்மூன்று  சிறுமிகளை  சீரழித்த  ஒரு காமுக கொலைகார  சீடனின்  ஆட்சியில் சரண்யா,  வித்தியா போன்ற சிறுமிகளுக்கு பாதுகாப்பு எப்படி கிடைக்கும்?? pundudu manavi rapist 001 copie1மாணவி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பெற்ற வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவர்கள் மூவரும் கொலை செய்யப்பட்ட மாணவியின் உறவினர்கள் எனவும் குடும்ப பகையே இக்கொலைக்கு காரணம் எனவும் சொல்லப்படுகின்றது.

யாழ் மாவட்ட பா.உறுப்பினர்களான டக்லஸ் தேவானந்தா, மாவை.சேனாதிராசா, சி.சிறீதரன் வடக்கு மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் உட்பட மக்கள் பிரதிநிதிகளும் வித்தியாவின் இறுதி நிகழ்விற்கு வந்து இறுதி விடை கொடுத்தனர்.

இந்த வித்தியாவின் கொலைக்கு காரணமானவர்களென சந்தேகத்தின் பெயரில் கைதாகியுள்ள குற்றவாளிகளுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜார் ஆக கூடாது என யாழ்.பல்கலைகழக சமூகம் சபதம் எடுத்துள்ளது.

புங்குடுதீவு மாணவியின் படுகொலை நீதி கோரி யாழ்.பல்கலைகழக சமூகத்தால் மேற்கொள்ளப்பட்ட கண்டன போராட்டத்தின் பின்னரே யாழ்பல்கலைகழக சமூகம் அவ்வாறு சபதம் எடுத்துக்கொண்டது.

அத்துடன் அவ்வாறான குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜார் ஆகும் சட்டத்தரணிகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியான மாபெரும் போராட்டத்தினை முன்னெடுப்போம் எனவும் பல்கலைகழக சமூகம் எச்சரித்துள்ளது.

யாழ் பல்கலைகழகத்தில் பதவி வகித்த “கற்பழிப்பு கணேசலிங்கம்”போன்றவர்கள் தனது வீட்டில் வேலைக்கமர்த்தியிருந்த சிறுமியை பல ஆண்டுகளாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதன் காரணமாக குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டபோது அவருக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் வக்கீல்களாக நீதிமன்றில் வாதாடி வரலாற்று புகழ் கொண்டனர்.

அப்போது திறக்காத வாயை இப்போதாவது யாழ்.பல்கலைகழக சமூகம் திறந்துள்ளதே என நாம் நின்மதி கொள்ள முடியாது.

அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பே பாலியல் வன்முறையாளனுக்கு ஆதரவாக வாதிட நீதிமன்றம் செல்லாதே என்று இந்த யாழ்.பல்கலைகழக சமூகத்தினர் எச்சரித்திருந்தால் இன்று வித்தியாவுக்கு இந்த கதி நேர்ந்திருக்காது.

sritharan-mp  பதின்மூன்று  சிறுமிகளை  சீரழித்த  ஒரு காமுக கொலைகார  சீடனின்  ஆட்சியில் சரண்யா,  வித்தியா போன்ற சிறுமிகளுக்கு பாதுகாப்பு எப்படி கிடைக்கும்?? sritharan mp1இக்கொலை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வடக்கு மாகாண பிரதிபொலிஸ் மா அதிபருக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் “வடக்கில் காணப்படும் குற்றங்களோடு தொடர்புடையவர்கள் சம்பந்தமாக பொலிஸ் எடுக்கின்ற நடவடிக்கைகளில் மீது கேள்வி எழுந்துள்ளது.” “இத்தகைய கொடுரமான வெறித்தனமான குற்றவாளிகளால் மேற்கொள்ளப்படும் சம்பவங்களால் வடக்கு மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

“என்கின்ற அரசாங்கத்தை நோக்கிய சகட்டுமேனித்தனமான குற்றச்சாட்டுக்களே இடம்பெற்றுள்ளன. அதற்கிடையில் அந்த கடிதம் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பபட்டதோ இல்லையோ கவனமாக பிரதி செய்யப்பட்டு “தமிழ் வின்”இணையத்தில் பிரசுரிக்கப்பட்டதனூடாக சிறிதரன் தனது நோக்கினை ஈடேற்றிவிட்டார்.

இத்தகைய கொலை கொடுரங்கள் குறிப்பாக வடக்கில் அடிக்கடிஇடம்பெற்றே வருகின்றன. கடந்த ஒருசில தினங்களுக்கு முன்னரும் யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் கூட வன்னியிலும் இதுபோன்ற சரண்யா என்னும் பெற்றோரை இழந்த பதினாறு வயது மாணவி ஒருத்தி பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு பின்னர் இறந்து போனார்.

pen-1  பதின்மூன்று  சிறுமிகளை  சீரழித்த  ஒரு காமுக கொலைகார  சீடனின்  ஆட்சியில் சரண்யா,  வித்தியா போன்ற சிறுமிகளுக்கு பாதுகாப்பு எப்படி கிடைக்கும்?? pen 12

(கள்ளக்காதல் விவகாரம்: யாழ். வட்டுக்கோட்டையில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்)

ஆனால் இந்த கொலைகளெல்லாம் இதுபோன்று அதிக கவனம் பெறவில்லை. வெட்டிகொல்லப்பட்ட பெண் கணவனை இழந்தவள் என்பதும் அவள் இளைஞன் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தாள் என்பதும் அவளைப்பற்றி வெளி வந்த செய்திகள்.

இதனூடாக எமது சமூகத்தின் பார்வையில் உண்டாக கூடிய அவள்குறித்த “கீழ்தர” எண்ணமும் அவள் ஏதோ ஒரு வகையில் தண்டிக்கப்படவேண்டியவள்தான் என்கின்ற வரட்டு மனநிலையும் அந்த மெளனத்துக்கு காரணமாயிருக்கலாம்.

manavi-3  பதின்மூன்று  சிறுமிகளை  சீரழித்த  ஒரு காமுக கொலைகார  சீடனின்  ஆட்சியில் சரண்யா,  வித்தியா போன்ற சிறுமிகளுக்கு பாதுகாப்பு எப்படி கிடைக்கும்?? manavi 3சிறுமி சரண்யா

வன்னி சிறுமி சரண்யா ஒரு ஏழை. ஆதரவற்றவள் என்பதனால் அவளது கொலை பற்றிய கேள்விகள் போதியளவு எழவில்லை. ஆனாலும் பின்னர் அக்கொலையில் தலையிட்ட மனிதாபிமான செயட்பாட்டாளர்களின் முயற்சியால் அக்கொலை குறித்த விசாரணைகள் பின்னர் முடுக்கிவிடப்பட்டன. ஆனாலும் தீர்ப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

எப்படியோ இதுவரைகாலமும் இத்தகைய சம்பவங்களின் போது இடம்பெறாத கவனயீர்ப்பு இந்த வித்தியாவின் கொலையின் பின்னராவது இடம்பெற்றிருப்பது நின்மதியை தருகின்றது.

ஆனால் இந்த வக்கிர எண்ணம்கொண்ட கொண்ட இளைஞர்களின் உருவாக்கம் எதிலிருந்து தொடங்குகின்றது?

இவர்கள் எப்படி இத்தகைய கொடுமைகளை மிக மிக சாதாரணமாக செய்துவிடும் மனோநிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்?

கொள்ளைகளினதும் கொலைகளினதும் எண்ணிக்கை அதிகரிப்புத்தானே எமக்கு லெப்டினன்களையும் கேர்ணல்களையும் உருவாக்கித்தந்தது?

கொலைகளை போஷித்த மகானை எப்படி நாம் தேசிய தலைவர் என்று கொண்டாட முடிந்தது? இத்தகைய பாலியல் வன்முறைகளுக்கும் கொலைகளுக்கும் பின்னணியில் இருந்து செயல்படும் எமது சமூக உறவுகளின் தாக்கம் எத்தகையது?

எமது கலாசாரம், பண்பாடு என்கின்ற பெயர்களில் கட்டிக்காக்கப்படும் சாதியஆணாதிக்க தடிப்புகளும், சண்டித்தனங்களும் இத்தகைய மிலேச்சத்தனங்களுக்கு எப்படி துணைபுரிகின்றன? என்கின்ற கேள்விகளை நாம் ஒருபோது கேட்பதில்லை.

போலிஸ் தரப்பு பதிவுகளுக்கு அப்பால் இதுபற்றிய ஆய்வுகளோ தரவுசேகரிப்புகளோ எமது சமூகமட்டத்தில் இல்லவேயில்லை.

தம்மை சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களோ சிவில் சமூக பிரதி நிதிகள் என்று தேர்தல்காலங்களில் மட்டும் தலைகாட்டி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு குஞ்சம்கட்ட பாதிரிமாரோடு இணையும் அரைவேக்காட்டு புத்திஜீவிகளோ இத்தகைய முயற்சிகளில் இறங்குவதேயில்லை.

அவர்களுக்கு அது அவசியமானதொரு பணியாக தெரிவதில்லை. அதுபற்றி அக்கறை கொள்பவர்களை எமது சமூகம் வீணர்கள்´, பிழைக்கத்தெரியாதவர்கள் என்கின்ற பட்டம்கொடுத்தே கெளரவிக்கின்றது.

ஏதோ பிறந்தோமா படித்தோமா முடிந்தவரை உழைத்தோமா என்று செக்குமாட்டுதனமாக செயல்படுபவர்களே எமது சமூகத்தின் மதிப்புக்குரியவர்களாகின்றார்கள்.

இந்த இழிநிலை எப்போது நீங்குகின்றதோ அப்போதுதான் தமிழ் சமூகத்தில் ஒரு பொதுநல அக்கறைகொண்ட சிவில் கட்டமைப்பு துளிர்க்கமுடியும்.

அதுவரை “எரிகின்ற வீட்டில் முடிந்தவரை பிடுங்கியது இலாபம்” என்னும் கொள்கைகொண்ட கூட்டமைப்பு தலைவர்களே எம்மை வழிநடத்துவார்கள்.

ingaranesan001  பதின்மூன்று  சிறுமிகளை  சீரழித்த  ஒரு காமுக கொலைகார  சீடனின்  ஆட்சியில் சரண்யா,  வித்தியா போன்ற சிறுமிகளுக்கு பாதுகாப்பு எப்படி கிடைக்கும்?? ingaranesan001

இல்லாவிட்டால் அமைச்சர் ஐங்கர நேசன் வித்தியாவின் கொலைக்கு புலிகள் இல்லாமையே காரணம் என்று பேசியிருக்கமாட்டார். புலிகளின் காலத்தில் பெண்கள் இரவில்கூட சுதந்திரமாக நடமாடினார்களாம்.

எனவே புலிகளின் வரவுக்காக மக்கள் மீண்டும் காத்திருக்கின்றார்களாம்.ஒரு பொறுப்புவாய்ந்த அமைச்சர் பேசுகின்ற பேச்சா இது? அது புலிகளின் நல்லாட்சியின் வெளிப்பாடு அல்ல.

ஒரு மயான அமைதியினை மக்கள் சுதந்திரமாக வாழ்ந்ததன் ஆதாரமாக திரிபுபடுத்த முடியாது. ஒரு நீதிமானின் அமைச்சரவையிலே அங்கம்வகிக்கும் ஒருவர் இப்படி பொய்சாட்சி சொல்லலாமா?

எந்த மக்கள் இவரிடம் புலிகள் மீண்டும் வர காத்திருக்கின்றோம் என்று இரந்தனர்?வயிற்றுப்பிழைப்புக்காக சுட்டுவிற்ற அப்பத்துக்கும் புலிகளுக்கு வரிகட்டிய ஏழைத்தாயா? பெற்றமகனை புலிகளின் ஆள்பிடிக்கு பறிகொடுத்த ஏக்கத்தில் பரிதவித்து செத்த தந்தையின் ஆன்மாவா? துரோகி என்றும் சமூக விரோதி என்றும் புலிகள் மின்கம்பத்தில் கட்டிதூக்கப்பட்ட தமிழ்மகனின் பரம்பரையா?

பருவமடையா வயதிலே புலிகளால் கடத்தப்பட்டு பயிற்சி முகாம்களில் நரக வேதனையை அனுபவித்து கரும்புலிகளாய் மாண்டுபோன சிறுமிகளின் சகோதர்களா? எந்த மக்கள் இவரிடம் புலிகள் மீண்டும் வர காத்திருக்கின்றோம் என்று இரந்தனர்?

வடக்கு மாகாண தேர்தல் முடிந்த போது உருவான பதவி சண்டைகளை தீர்க்க படித்தவர்களையே அமைச்சர்களாக நியமிப்பேன் என்று சொன்ன முதலமைச்சர் ஐங்கரநேசன் போன்ற நீசர்களை எப்படி அமைச்சர்களாக தெரிவுசெய்தார்? என்று நாம் அதிர்ச்சியடைய தேவையில்லை?

vikkia-680x365  பதின்மூன்று  சிறுமிகளை  சீரழித்த  ஒரு காமுக கொலைகார  சீடனின்  ஆட்சியில் சரண்யா,  வித்தியா போன்ற சிறுமிகளுக்கு பாதுகாப்பு எப்படி கிடைக்கும்?? vikkiaஅவரது அறிவே மங்கி போகும் நிலையில் முதலமைச்சரின் செயல்பாடுகளும் இருக்கின்றன.பதின்மூன்று சிறுமிகளை சீரழித்த ஒரு காமுக கொலைகாரனை ஆன்ம ஈடேற்றத்துக்கு வழிகாட்டும் புனிதனாக கைக்கொள்ளும் முதலமைச்சர் ஆட்சியிலே வித்தியா போன்ற சிறுமிகளில் கைவைக்க எந்த இளைஞனும் அச்சப்பட நியாயமில்லைத்தான்.

கொலைகளை செய்து ஆச்சிரமங்களுக்குள்ளேயே புதைத்தமைக்காக இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறைகுள்ளேயே செத்துப்போன ஆசாமி பிரேமானந்தாவுக்கு வடமாகாணத்தில் கோயில்கட்டும் முதலமைச்சரின் காலத்தில் ஒழுக்க சீலர்களாக இளைஞர் சமூகம் வளருமென்று நாம் எதிர்பார்த்தால் அது நமது முட்டாள்தனமாகவே இருக்கும்.

ஆன்மீக உரைகள் என்னும் பெயரில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் கம்பன்வாருதி ஜெயராஜும் நிகழ்த்துகின்ற கொழும்பு மேட்டுகுடிகளுக்கான கிழுகிழுப்பு ஊட்டும் உரைகள் எவ்வளவு தூரம் பெண்களை பாலியல் பண்டங்களாக சித்தரிக்கின்றது? என்பதையிட்டு இனிமேலாவது பெண்ணிய அமைப்புக்கள் கவனம் கொள்ள வேண்டும்.

இத்தகைய உரைகளுக்கு தடை விதிக்குமாறு நீதிமன்றங்களை அணுக வேண்டும்.

குறைந்த பட்சம் ஊடக தர்மம் என்பது பற்றிய எந்தவித அறிவும் இலங்கை செய்திகளை மையமாக கொண்டு செயல்படும் செய்தி ஊடகங்களை நடத்துபவர்களில் பெரும்பாலானோருக்கு இல்லை என்பதை கடந்த சில நாட்களாக இணையத்தளங்களில் வித்தியாவின் படங்கள் பட்டபாடும் அது குறித்து வெளியான ஆபாச தலைப்புகளும் சொல்லி நிற்கின்றன.

மேற்கு நாடுகளில் இதுபோன்ற சம்பவங்களின்போது ஒருபோதும் இப்படியான புண்ணாக்குத்தன ஜேர்னலிசம் செய்ய முடியாது.

ஏன் இந்தியாவில் கூட இதுபோன்ற பாலியல் வன்முறைஇகொலைகளுக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண்களின் படங்களை வெளியிடுவது சட்டரீதியாக தடை தடை செய்யப்பட்டேயுள்ளது.

மறுபுறம் எடுத்ததற்கெல்லாம் அரசாங்கத்தையும் ஆமியையும் அடுத்தவனையும் குற்றம் சொல்லி சொல்லியே வருவதன் அறுவடைதான் மூன்று இளைஞர்கள் அதுவும் சகோதரர்கள் இதுபோன்ற குற்ற செயல்களில் திட்டமிட்டு ஈடுபடும் தைரியத்தை வழங்குகின்றது.

எதுநடந்தாலும் எமது சமூகத்தின் வண்டவாளங்களையெல்லாம் மூடிமறைத்து தமிழனின் “புனிதத்தை“பாதுகாக்கும் தலைவர்கள் இருக்கும் வரை வித்தியாவையும் சரண்யாவையும் கொலைசெய்யும் பாதகர்கள் பயப்பட போவதில்லை.

இதுபோன்ற கொலைகளின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகளின் விடுகின்ற தூரநோக்கற்ற அறிக்கைகளும் செயல்பாடுகளும் மறைமுகமாக அல்ல நேரடியாகவே இந்த கொலை குற்றவாளிகளை பாதுகாக்கின்றது.

தமிழ் சமூகத்தின் அகசூழல் எவ்வளவு அசிங்கமாக இருக்கின்றது என்பதையிட்டு எந்த அரசியல் வாதியும் பகிரங்கமாக வெட்கத்தை ஒப்புவிப்பதில்லை.

எப்போது நாமும் நமது சமூகமும் எப்போதும் புனிதமாக இருப்பதாகவே போதிக்கின்றார்கள்.

எங்கிருந்து வருகின்ற யார் யாரோவெல்லாம் தான் எமது சமுகத்தை கெடுக்கின்றார்கள் என்கின்ற மாயையை நாம் காட்டிக்காக்கும் வரை எமது சமூகத்தினை அழுகி நாறசெய்யும் இந்த போக்கிரிகளுக்கும் பொறுக்கித்தனங்களுக்கும் குறைவிருக்கபோவதில்லை.

– மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்

Premanantha-birthday60004  பதின்மூன்று  சிறுமிகளை  சீரழித்த  ஒரு காமுக கொலைகார  சீடனின்  ஆட்சியில் சரண்யா,  வித்தியா போன்ற சிறுமிகளுக்கு பாதுகாப்பு எப்படி கிடைக்கும்?? Premanantha birthday60004

SHARE