கைலாகொட பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி வீட்டின் சுவரில் மோதியதில் விபத்து(Accident) ஏற்பட்டுள்ளது.
இதன்போது அவ்வழியில் சென்ற கார் ஒன்றும் குறித்த பேருந்தில் மோதியதில் பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்துக்கான காரணம்
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெதபத்தனையில் இருந்து பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த தனியார் பேருந்தின் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் பேருந்து மற்றும் கார் பலத்த சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் சுவரும் உடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.