கிரீஸ் நாட்டில் இருந்து மெசிடோனியாவுக்கு செல்வதற்காக ஆற்றை கடந்தபோது கர்ப்பணி உள்ளிட்ட 3 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.உள்நாட்டு போர், பஞ்சம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஏராளமானோர் ஐரோப்பியாவுக்கு அகதிகளாக வருகின்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் கிரீஸ் வழியாகவே வருகின்றனர். எனினும் அவர்களை ஏற்க பல்வேறு நாடுகளும் மறுத்து வருகின்றன. கிரீஸின் எல்லை அருகே அமைந்துள்ள மெசிடோனியா நாடும் தங்கள் எல்லையை மூடியுள்ளது. எனவே ஆயிரக்கணக்கான அகதிகள் கிரீஸ் முகாம்களில் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தரை வழியாக மெசிடோனியாவுக்கு செல்ல முடியாது என்பதால் ஏராளமான அகதிகள் அருகில் உள்ள ஆற்றை கயிறு மூலம் கடந்து செல்ல முடிவு செய்துள்ளனர். இவ்வாறு செல்ல முயன்றபோது கர்ப்பிணி பெண், அவரது சகோதரி மற்றும் மாற்றுத்திறனாளி என மூன்று பேர் ஆற்றில் மூழ்கி மரணமடைந்துள்ளனர். எனினும் வேறு வழியில்லாததால் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அகதிகள் ஆபத்தான இந்த பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். மெசிடோனியாவை சென்றடைந்த பின்னர் அங்கிருந்து வேறு நாடுகளுக்கு செல்கின்றனர். சட்ட விரோதமான அகதிகள் மேற்கொள்ளும் இந்த பயணத்துக்கு கிரீஸ் நாட்டின் பொலிசாரும் உதவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. |