பந்து வீச்சாளர் கெவோன் கூப்பர் பந்து வீச்சில் சந்தேகம்

657

ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் கெவோன் கூப்பர் பந்து வீசும் முறை குறித்து புகார் செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டியில் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

இந்தப் போட்டியில் (மேற்கிந்திய தீவுகள்) ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கெவோன் கூப்பர், 38 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

இந்நிலையில் இவரின் பந்து வீச்சு முறை விதிமுறைக்கு புறம்பாக இருந்ததாக ஆடுகள நடுவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த காரணத்தினால் கெவோன் கூப்பர் பந்து வீச்சு குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பந்து வீச்சு கமிட்டி ஆய்வு செய்யும் என்று தெரிகிறது

SHARE