பனிக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

329
பனிக்காலம் வந்தாலே சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் நாம் அவதிப்படுவோம். அவற்றை குணப்படுத்துவதற்கான எளிய உணவு வகைகள் குறித்து கீழே காணலாம்.பொதுவாக நாம் கீரை வகைகள்,கறிவேப்பிலை போன்றவற்றை சமையலுக்கு பயன்படுத்தும் போது மிச்சமிருக்கும் அதன் குச்சிகளை(ஈர்க்கை) தேவையில்லை என்று ஒதுக்குவைத்திவிடுகிறோம்.

இனி அப்படி செய்யாதீர்கள். ஏனென்றால் அவற்றை உணவு பதார்த்தமாக மட்டுமின்றி நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

முருங்கை ரசம்:

முதலில் முருங்கை ஈர்க்கை சிறு துண்டுகளாக வெட்டி எடுக்கவும். இதனுடன் 4 பூண்டு சேர்த்து அரைத்துகொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு கடுகை தாளிக்கவும். கடுகு பொறிந்ததும் இஞ்சி துண்டுகள் சேர்க்கவும். பூண்டு, முருங்கை ஈர்க்கு சேர்த்த கலவையை போட்டு நன்கு வதக்கவும்.

இதனுடன் சிறிது மஞ்சள்பொடி சேர்க்கலாம். மிளகு, சீரகம், பூண்டு சேர்த்த கலவையை சேர்த்து வதக்கவும். பின்னர், உப்பு சேர்த்து தேவையான அளவு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த முருங்கை ஈர்க்கை ரசத்தை சாப்பாட்டில் சேர்த்துவந்தால் இருமல், காய்ச்சல் தடுக்கப்படும். செரிமான சக்தியை தூண்டுகிறது.

கறிவேப்பிலை ரசம்:

இதேபோன்று கறிவேப்பிலை ஈர்க்கை பயன்படுத்தியும் ரசம் தயாரிக்கலாம். முதலில் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவேண்டும். காய்ந்தவுடன், பெருங்காயப் பொடி, கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மிளகு, சீரகம், பூண்டு சேர்ந்த கலவையை சேர்க்கவும்.

ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்க்கவும். கறிவேப்பிலை ஈர்க்குகளை சிறிய துண்டுகளாக நசுக்கி எடுத்து சேர்க்கவும். இது வதங்கியவுடன் தக்காளி சாறு, புளி கரைசல், தேவையான அளவு உப்பு, நீர் விட்டு கொதிக்க வைக்கவும்.

சிறிது கொத்துமல்லி இலைகளை சேர்த்துகொள்ளலாம். இந்த ரசத்தை குடித்துவந்தால் வாந்தி, குமட்டல், தலைசுற்றல் போன்றவை சரியாகும். உடலுக்கு உஷ்ணத்தை கொடுக்கிறது.

SHARE