பயங்கரவாதம் தொடர்பான அமெரிக்கக் கண்ணோட்டத்தைச் சாதகமாகக் கொண்டே சிங்கள ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டத்தை அழித்து, தமிழ் மக்கள் மீதான் இனப் படுகொலையை நடாத்தியும் முடித்தது.

589

MRBC924

வன்முறை அரசியல் ஊடாக அல்லது அரச பயங்கரவாதம் ஊடாக தமிழ் மக்களை அடிபணிய வைக்கும் பேரினவாத சிந்தனையுடன் மகிந்த அரசு இப்போது புதியதொரு அறிவிப்பை வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 தமிழ் அமைப்புக்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று தடைசெய்வதற்கு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தீர்மனித்துள்ளது.

Police_1

இலங்கைக்கு எதிராக, ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் அமர்வில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க தீர்மானத்திற்கான உடனடி எதிர்வினையாக சிங்கள அரசால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதுவும், இரட்டை கோபுரங்களின் தாக்குதல் அடுத்து ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்காவினால் 28.9.2001ல் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373 மூலமாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட இந்தப் பிரேணை வெளிநாடுகளில் இருந்து தீவிரவாத அமைப்புக்களை தடை செய்யும் அதிகாரம் கொண்டது. அமெரிக்கா கொண்டுவந்த ‘பயங்கரவாதம்’ தொடர்பான பிரேரணையைக் கொண்டே விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

பயங்கரவாதம் தொடர்பான அமெரிக்கக் கண்ணோட்டத்தைச் சாதகமாகக் கொண்டே சிங்கள ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டத்தை அழித்து, தமிழ் மக்கள் மீதான் இனப் படுகொலையை நடாத்தியும் முடித்தது.

தாமதமாகவே, தமது நியாயப் பிறழ்வை உணர்ந்து கொண்டதனாலேயே, அமெரிக்கா அதற்கான சிறிய பரிகாரத்தையாவது தமிழர்களுக்கு வழங்க முற்பட்டுள்ளது. ஜெனிவா போர்க் களத்தில், தோற்றுப்போன சிங்கள அரசு, அமெரிக்காவுடன் மோதல் நிலைக்குச் சென்று, இன்னொரு களத்தைத் திறந்துள்ளது.

சிங்கள அரசின் புதிய தீர்மானம், ஐரோப்பிய ஒன்றியம் உட்பட ஐ.நா. மினித உரிமைகள் மையத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளுக்கு எரிச்சலை ஊட்டுவதாகவும் இருக்கப் போகின்றது.

தமிழீழ மக்களுக்கான நீதி கோரி ஜனநாயக வழிகளில் போராடும் வெளிநாட்டுத் தமிழ் அமைப்புக்கள் மீதான சிங்கள ஆட்சியாளர்களது தடையினை மேற்குலகோ, அமெரிக்காவோ, கனடாவோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவர்களது நாடுகளது ஜனநாயக வெளிகளில் சிங்கள ஆட்சியாளர்கள் மூக்கை நுழைக்க அனுமதிக்கப் போவதும் இல்லை.

prabaharan

இலங்கை  அரசு குறிப்பிட்டுள்ள தமிழ் அமைப்புக்களில் செயற்பாட்டாளர்களாக இருக்கும் முக்கியமானவாகள் பலரும் அந்தந்த நாடுகளின் குடியுரிமை பெற்றவர்களாகவும், அநீதிகளுக்கெதிராகப் போராடும் அங்கீகாரமுடையவர்களாகவும் இருக்கின்றார்கள். அவர்கள் மீது சட்டப்படியான எந்த நடவடிக்கைகளையும் தன்னால் மேற்கொள்ள முடியாது என்பதையும் சிங்கள ஆட்சியாளர்கள் நன்றாகத் தெரிந்தே வைத்துள்ளார்கள்.

சிங்கள அரசின் இலக்கும் அதுவல்ல. சிங்கள ஆட்சியாளர்கள், இந்தத் தீர்மானத்தில் அதனையும் சேர்த்துள்ளார்கள். அதாவது, ‘இலங்கையிலிருந்து இந்த இயக்கங்களுடன் தொடர்பு வைத்து கொள்பவர்களும் அவற்றின் நிதி உதவிகளை பெறுவோரும் குற்றவாளிகளாக காணப்படுவார்கள்’ என்ற அச்சுறுத்தலும் அதனூடாக விடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலுக்குப் பிந்திய காலங்கள் தமக்குச் சாதகமானதாக இருக்கும் என்ற மகிந்த சிந்தனைக்கு, புலம்பெயர் தமிழர்கள் பெரும் சவாலாக உள்ளார்கள். தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டு, அவர்களது சொத்துக்கள் மட்டுமன்றி, அவமானப்படுத்தல்கள் ஊடாகவும், அச்சுறுத்தல்கள் ஊடாகவும் உளவுரண் சிதைக்கப்பட்ட மனிதர்களாக்கப்பட்டார்கள்.

முழுமையான இராணுவ முற்றுகைக்குள்ளாக்கப்பட்ட தமிழர்கள் இவ்வளவு கெதியாக நிமிர்ந்து எழுவார்கள், தமக்கு எதிராகத் தலை நிமிர்வார்கள் என்று சிங்கள ஆட்சியாளர்கள் நினைத்திருக்காத நாட்களில், தமிழினம் மீள் எழுச்சி கொண்டுள்ளது. இதற்கான வல்லமையும், வரமும் புலம்பெயர் தமிழர்களாலேயே வழங்ஙப்பட்டு வருகின்றது என்ற சிங்களக் கணக்கில் இந்தத் தீர்மானம் உருவெடுத்துள்ளது.

விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப நாட்களில், சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் அமைப்புக்கள் மீது விதித்த தடைகளே அவர்களை ஒன்றிணைய வைத்து, விஸ்வரூபம் கொள்ள வைத்தது. அதுவே, இந்தத் தீர்மானத்தின் பெறுபேறாகவும் அமையப் போகின்றது

Elite-Globalismus-Amerika-Obama-Juden-Zionisten-Israel-Gaza-Streifen-Palaestina-Krieg-Terror-Anti-Illuminati-NWO-Neue-Weltordnung-New-World-Order-Verschwoerung-Inside-Job-Holcaust

முள்ளிவாய்க்கால் பேரழிவின்பின் பிளவுண்டு போன தமிழ்த் தேசிய சக்திகள் மீள் இணைவு கொள்வதற்கான நியாயங்களையும், கட்டாயங்களையும் மட்டுமே இந்தத் தீர்மானமும் பெறுபேறாக அறுவடை செய்யப் போகின்றது.

திக்குத்திசை தெரியாமல், யாரை நம்புவது? யார் பின்னால் அணிவகுப்பது? என்ற குழப்பத்தில் தவித்த புலம்பெயர் தமிழர்களுக்கும் மகிந்த ஆட்சியாளர்கள் தெளிவான திசையைக் காட்டியுள்ளார்கள்.

எங்கெல்லாம் குண்டுகள் வீழ்ந்து வெடிக்கின்றதோ, அதுவே தமிழீழத்தின் நிலப்பரப்பு என்ற உணர்வை ஏற்படுத்தி, அந்த நிலத்தை மீட்கும் போராட்டத்தில் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பின்னே அணிவகுத்தார்களோ, அத்தகையதொரு அணிவகுப்புக்கான தருணத்தை சிங்கள அரசு புலம்பெயர் தமிழர்களுக்கு வழங்கியுள்ளது. தமிழ் மக்கள் போர் தொடுக்க வேண்டிய பிரதான இலக்கையும் சிங்கள ஆட்சியாளாகளே நிர்ணயம் செய்து வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தன் ஓட்டுக்குள் தலையைப் புதைத்துக் கொள்ள முடியாது. சிங்கள தேசத்துடன் சமரச அரசியல் நடாத்த முடியாது. வட மாகாண சபையுடன் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள முடியாது. ஏனென்றால், சிறிலங்கா ஆட்சியாளர்கள் பயங்கரவாத அமைப்புக்களாக அடையாளப்படுத்தியுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஏதாவதொன்றில் புலம்பெயர் தமிழர்கள் அத்தனை பேரும் பங்காளர்களாகவே உள்ளார்கள்.

சிங்கள ஆட்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல், புலம்பெயர் தமிழினம் விடுதலைப் புலிகளது இலக்கு நோக்கிய அடையாளங்களாகவே சிங்கள ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தமிழீழ மக்கள் தொகையின் பாதி அளவானவர்கள். அதனால், சிங்கள ஆட்சியாளர்கள் அச்சம் கொள்வது நியாயமானது. அதுவே, தமிழர்களது பலமாக மீண்டும் பிரவாகம் கொள்ளப் போகின்றது.

புலம் பெயர் தமிழர்களின் பொருளாதாரத்தடையை சந்திக்க இருக்கும் மகிந்த.

தமிழ் அமைப்புகளை தடைசெய்தால் இலங்கையே நெருக்கடியில் சிக்கும்: ஈழத்தமிழர்களின் நியாயமான தீர்வுக்காக சர்வதேச அரங்கில் அயராது குரல்கொடுத்து ஜனநாயக வழியில் போராடிவரும் தமிழர் அமைப்புகளை இலங்கை அரசு தடைசெய்தால் மேலும் நெருக்கடிகளை இந்த அரசு ஜெனிவாவில் சந்திக்க வேண்டிவரும்

ஜெனிவாத் தீர்மானத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டிய 15 புலம் பெயர் தமிழர் அமைப்புகளைத் தடை செய்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன..

மஹிந்த அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு விழுகின்ற இன்னொரு அடி .இந்த அரசு தடைசெய்யத் தீர்மானித்துள்ள 15 புலம் பெயர் தமிழர் அமைப்புகளும் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற அமைப்புகளாகும். இவற்றில் முக்கிய சில அமைப்புகள் உலக நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து ஈழத்தமிழர்களின் இருப்பைக் கருத்தில்கொண்டு மாநாடுகளைக்கூட நடத்தி வருகின்றன

இவற்றை இலங்கையில் புலிச் சாயம் பூசி மஹிந்த அரசு தடை செய்யலாம். ஆனால் இந்த அமைப்புகள் செயற்படும் நாடுகளில் அவற்றைத் தடை செய்ய முடியாது. 15 புலம் பெயர் தமிழர் அமைப்புகளைத் தடை செய்தால் மேலும் 15 அமைப்புகள் புதிதாக உருவெடுக்கும் என் பதை மஹிந்த அரசு உணர வேண்டும் எனவேஇ இந்த அரசு இந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு முதலில் நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணும் வழியைத் தேட வேண்டும்

16 புலம்பெயர் அமைப்புக்களுகளைத் தடை செய்தது சிறீலங்கா அரசாங்கம்!! கூட்டமைப்பும் விரைவில் தடை செய்யப்படும்!!
தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதான தடையின் முதல் கட்டமாக, வெளிநாடுகளில் இயங்கும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்துள்ளது.

சுமார் 16 அமைப்புகள் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய 400 பேரின் விபரங்களும் வெளியிடப்படவுள்ளது.

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணைக்கு உதவி வழங்கியதாக கூறபட்டும், இந்த அமைப்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்படுவதாக தெரிவித்தும் அவை தடை செய்யப்பட்டுள்ளன.

முக்கியமாக பின் வருபவர்களிடம் தொடர்பு வைத்திருக்கும் எவரும் குற்றவாளிகளாக கருதபட்டு கைது செய்யப்படலாம்:

1.    நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன்
2.    கத்தோலிக்க மத குரு அருட்தந்தை. இமானுவேல்
3.    விஸ்வநாதன் ருத்திரகுமாரன்
4.    விநாயகம் எனப்படும் சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி

இவர்களும், இவர்களது இயக்கங்களும் தடைசெய்யப்பட்டமை என்று அந்தந்த நாடுகளுக்கு தெரிவிக்க இலங்கை அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அமெரிக்காவினால் 28.9.2001ல் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373 மூலமாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இரட்டை கோபுரங்களில் தாக்குதல் அடுத்து ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா சமர்பித்த இந்ந பிரேரணை, வெளிநாடுகளில் இருந்து தீவிரவாத அமைப்புக்களை தடை செய்யும் அதிகாரம் கொண்டது.

இதன் அடிப்படையில்,இலங்கை அரசாங்கம் அமெரிக்கா உட்பட கனடா,பிரித்தானியா ,நோர்வே, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இயங்கும் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்களை தடைசெய்து பிரகடனப்படுத்தியுள்ளது.

இதன்படி தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகள் தொடர்பில் இந்த வாரம் அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் யுத்தக் குற்றம் கோரிய பிரேரணைக்கு முகம் கொடுக்கும் ராஜதந்திர முன்னெடுப்பின் பொருட்டு இந்த தடை அமுலாக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அரசாங்கம் தடைவிதித்துள்ள அமைப்புக்கள்

01. தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE)
02. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO)
03. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC)
04. பிரித்தானித் தமிழர் பேரவை (BTF)
05. உலகத் தமிழர் இயக்கம் (WTM)
06. கனேடியன் தமிழர் காங்கிரஸ் (CTC)
07. அவுஸ்ரேலியன் தமிழர் காங்கிரஸ் (ATC)
08. உலகத் தமிழர் பேரவை (GTF)
09. கனேடியத் தேசிய மக்கள் அவை (NCCT)
10. தமிழத் தேசிய சபை (TNC)
11. தமிழ் இளையோர் அமைப்பு (TYO)
12. உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC)
13. நாடுகடந்த தமிழீழ அரசு (TGTE)
14. தமிழீழ மக்கள் அவை (TEPA)
15. உலகத் தமிழ் மறுவாழ்வு நிதியம் (WTRF)
16. தலைமைச் செயலகக் குழு (HG Group)

TPN NEWS

SHARE