அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதலுக்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய குற்றச் செயலில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சட்டவிரோத செயற்பாடுகளை ஈடுபடுவதற்கு இவ்வாறான நபர்களுக்கு எந்தவகையிலும் இடம் இல்லையென்று கடற்படை தெரிவித்துள்ளது. இதற்கான பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதால் கடல் வழியாக இவர்கள் தப்பியோட முடியாது. சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கடற்படை மேலும் தெரிவிக்கிறது.
இதேவேளை மணலை சட்டவிரோதமாக எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் மீண்டும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் ஜெனரல் இசுறு சூரிய பண்டார திருகோணமலை கிண்ணியா போன்ற பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.
இது குறித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.