பயங்கரவாத திட்டங்களுடன் நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது

109

 

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்காக நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவிய பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும், உத்தரப் பிரதேசத்தில் வைத்து மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், ஐஎஸ்ஐ உதவியுடன் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவி, தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் முகமது அல்தப் பட், சையத் கஜன்பர் ஆகியோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனவும், நசீர் அலி காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

முகமது அல்தப் பட், ஐ.எஸ்.ஐ., உதவியுடன் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பினரிடம் பயிற்சி பெற்றவர் என உத்தர பிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE