LTTE நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை?

690

LTTE  நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சந்தேகத்திற்கு இடமான பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெற்றால் அது குறித்து அவதானம் செலுத்துமாறு பொதுமக்களிடம் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கராத செயற்பாடுகள் குறித்து சந்தேகம் ஏற்பட்டால் அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதனை தடுப்பது காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலனாய்வுப் பிரிவினரின் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க்பபட்டு;ளளதாகவும் குறிப்பிட்டு;ள்ளார்.
இன மற்றும் மத முரண்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரளிக்கும் தரப்பினர் தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட்டு தகவல்களை காவல்துறையினருக்கு வழங்க வேண்டியது அவசியமானது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE