பயனுள்ள பலரும் அறிந்திராத வாட்ஸ்ஆப் தந்திரங்கள்.!!

194

images-2வாட்ஸ்ஆப் செயலிக்கு முன்னுரை தேவையில்லை. உலக அளவில் குறுந்தகவல் செயலிகளில் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றது வாட்ஸ்ஆப். இதன் மூலம் மெசேஜ், வீடியோ மற்றும் படங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த செயலியைல் பல அம்சங்கள் இருக்கின்றது. இதில் குழுவாக மெசேஜ் அனுப்பும் ஆப்ஷனும் உள்ளது.

ஒரே மெசேஜை பலருக்கு ஒரே நேரத்தில் அனுப்பும் வசதி இதில் உள்ளது. இதே போல் இந்த செயலியில் உங்களுக்கு தெரிய வேண்டிய தெரியாமல் சில அம்சங்களும் இருக்கின்றது.

குழு பேச்சுக்கான அறிவிப்பை நிறுத்தவும்

சில நேரங்களில் க்ரூப் சாட் நம்மை எரிச்சல் அடைய செய்யும். வாட்ஸ்ஆப் செயலியில் க்ரூப் சாட் ஆப்ஷனை சில மணிநேரத்திற்கு ம்யூட் செய்யும் வசதி உள்ளது.

இந்த ஆப்ஷனை செயல்படுத்தினால் குறிப்பிட்ட குழுவிற்கு குறுந்தகவல் பரிமாற்றம் நடைபெற்றாலும் நோட்டிபிகேஷன் ஏதும் வராது.

இந்த ஆப்ஷனை பெற க்ரூப் சாட் மெனுவை தட்டி Menu > hit Mute > choose the time-frame என்பதை பின்பற்றவும்.

சில நேரத்திற்கோ அல்லது சில காலத்திற்கு நீங்கள் ம்யூட் செய்து கொள்ளலாம். அல்லது அறிவிப்பு மையத்தில் இருந்தே நேரே நீங்கள் mute செய்ய முடியும்.

இது வெப் பிரவுஸரில் செயல் புரியும். iOSஇல் group chat சென்று group info திரையை பெற குழு சப்ஜெக்டை தட்டவும்.

பின்பு muteஐ தேர்வு செய்யவும். நீங்கள் mute செய்ய வேண்டிய மணி துளியை தேர்வு செய்தல் அவசியம்.

க்ரூப் சாட்டில் உங்கள் தகவலை படித்தது யார்

ஒருவர் உங்கள் தகவலை படித்தார்களா இல்லையா என்பதை நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ள முடியும்.

இதை நிச்சயம் செய்ய இரண்டு ப்ளூ டிக் கிடைக்கும். இதுவே க்ரூப் சாட் என்றால் இவ்வாறு தெரிந்து கொள்ள முடியாது. உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் யார் தகவலை படித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஒரு வழி உள்ளது.

நீங்கள் அனுப்பிய தகவலின் மீது நீண்ட நேரத்திற்கு அழுத்தவும். டெக்ஸ்டின் அருகில் வட்ட வடிவத்தால் சூழப்பட்ட “I” என்பது வருகின்றதா என்று பாருங்கள்.

ஐகானை அழுத்தினால் யாருக்கு மெசேஜ் சென்றது யார் படித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

iphoneஇல் மெசேஜை இடதில் இருந்து வலது பக்கத்திற்கு ஸ்வைப் செய்தால் அறிந்து கொள்ள முடியும்.

புகைப்படம் கேலரியில் தோன்றுவதை நிறுத்தவும்

வாட்ஸ்ஆப்பில் உங்களுக்கு தேவையற்ற படங்கள் வந்தால் அவை உங்கள் கேலரியில் தோன்ற வேண்டாம் என்று நினைத்தால்.

File explorerஐ டவுன்லோட் செய்து நிறுவி கொள்ளவும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பெரும் ES file explorer போன்று.

இப்பொழுது ஆப்பை திறந்து sdcards/WhatsApp/Media சென்று பின் WhatsApp Images செல்லவும்.

புதிய ஃபோல்டர் ஒன்றை உறுவாக்கி nomedia என்று புதிய பெயர் சூட்டவும்.

வாட்ஸ்ஆப் சாட் வரலாற்றை அணைக்க

கூகுள் டிரைவில் எல்லா சாட்களையும் பேக்கப் செய்யும் ஆப்ஷன் உள்ளது. போனை ஆன் செய்யும் போது எல்லா தரவுகளையும் மீண்டும் பெற முடியும்.

இதற்கு WhatsApp >> Settings >> Chats and calls >> Backup chats என்பதை பின்பற்றவும். இப்பொழுது புதிய டிவைஸில் whatsappஐ நிறுவவும். அவ்வளவுதான்.

கடைசியாக பார்த்தவை, ப்ரோஃபைல் படம் மற்றும் ஸ்டேட்டஸ் மறைக்க

நீங்கள் கடைசியாக பார்த்த போட்டோ மற்றும் ஸ்டேட்டஸை மறைக்க வேண்டுமா.

இதற்கு Settings >> Account >> Privacy என்பதை பின்பற்றவும். கடைசியாக பார்த்த படங்கள், ப்ரோஃபைல் போட்டோ போன்றவற்றை பார்த்து எவ்வளவு பிரவைஸி வேண்டும் என்பதை தீர்மாணித்து கொள்ளுங்கள்.

சாட் ஹோம் திரையை உருவாக்க

சில நண்பர்களுடன் அடிக்கடி உரையாட வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் அதற்கான ஷார்ட்கட்டை பெற முடியும்.

உரையாடலை தட்டி பிடிக்கவும். உங்களுக்கு அப்ஷன்களின் பட்டியல் கிடைக்கும். அதில் Add conversation short cutஐ தேர்வு செய்யதால் வேலை முடிந்தது.

டெலீட் செய்த மெசேஜை திரும்ப பெற

வாட்ஸ்ஆப் தானியங்கியாக உங்கள் மெசேஜ்களை பேகப் செய்யும். நீக்கிய மெசேஜை பெற வாட்ஸ்ஆப் நிறுவியதை நீக்கி whatsapp setupஐ திரும்ப நிறுவவும். அப்பொழுது backup of your chats அதாவது சாட்களை திரும்ப பெற வேண்டுமா என்ற அறிவிப்பை க்ளிக் செய்யவும்.

இதை செய்து டெலீட் செய்த மெசேஜை திரும்ப பெற முடியும்.

ஒரே நேரத்தில் பலருக்கு விரைவாக மெசேஜ் அனுப்பும் வசிதி

வாட்ஸ்ஆப்பில் broadcast message என்ற சேவையில் உள்ளது. More menu ஆப்ஷனில் உள்ள broadcast message என்ற ஆப்ஷனை தேர்வு செய்து நீங்கள் அனுப்ப வேண்டிய தொடர்புகளை தேர்வு செய்யவும்.

இப்பொழுது மெசேஜை டைப் செய்து send செய்யவும்.

உங்கள் போன் எண்ணை மாற்றவும்

நீங்கள் உங்கள் போன் எண்ணை மாற்றி விட்டீர்களா ரீஇன்ஸ்டால் செய்யாமல் உங்கள் எண்ணை மாற்ற வழி உள்ளது.

இதற்கு Settings > Account > Change number என்பதை பின்பற்றவும். மேலே உங்கள் பழைய எண்ணை எண்டர் செய்து கீழே புதிய எண்ணை எண்டர் செய்து done என்பதை அழுத்தவும். பின்பு சரிபார்க்கும் செயலை பின்பற்றவும்.

வாட்ஸ்ஆப் உரையாடலின் வரலாற்றை ஒருவருக்கு அனுப்ப

முழு உரையாடலின் வரலாற்றை மின்னஞ்சல் மூலம் உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப முடியும்.

ஆண்ட்ராய்ட் பயன்பாட்டாளர்களுக்கு Menu->More->Email Conversation என்பதை பின்பற்றவும். யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களின் மின்னஞ்சல் விலாசத்தை சேர்க்கவும்.

SHARE