பயமுறுத்தும் இருண்ட கிரகத்தால் பூமியில் விழும் எரிகற்கள் : மறைக்கப்படும் தகவல்கள்

185

மர்மக் கிரகம் அல்லது இருண்ட கிரகம் என்று அழைக்கப்படும் நிருபு எனும் கிரகம் 1995ஆம் ஆண்டு முதன் முறையாக அடையாளம் காணப்பட்டது.

இப்போதைய சூழலில் இந்தக் கிரகம் தொடர்பிலான அதிக அச்சுறுத்தல் வெளிப்படுத்தப்பட்டு கொண்டு வருகின்றது. மேற்குலக ஊடக செய்திகள் 2017 ஆம் ஆண்டு இது பூமியில் பாரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றன.

என்றாலும் அந்தக் கிரகம் சுற்றிவரும் பாதை அது பயணிக்கும் வேகம் என்பது தொடர்பிலான உத்தியோக பூர்வ தகவல்கள் மறைக்கப்பட்டு கொண்டே வருகின்றது . ஒரு தரப்பினர் இவ்வாறானதொரு கிரகம் இல்லை என்று கூறி வருகின்றனர்.

ஆனாலும் விஞ்ஞானிகள் தரப்பு இந்த கிரகம் இருப்பதாகவே தெரிவித்துக் கொண்டு வருகின்றனர். இப்போது இந்த கிரகம் 2017ஆம் ஆண்டு எமது சூரியக் குடும்ப சுற்றுவட்டப்பாதையில் நுழையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நாசா விஞ்ஞானிகளும் இந்தத் தகவல்களை தற்போது மறைமுகமாக வெளிப்படுத்தி வருவதாகவே கூறப்படுகின்றது.

இவை ஒரு புறம் இருக்க அண்மையில் 180 அடி பரப்பளவு கொண்ட ஓர் விண்கல் பூமியின் பாதைக்கு அருகில் சென்றுள்ளது. இந்தக்கல் பூமியுடன் மோதும் என்ற 80 சதவீத எதிர்ப்பார்ப்பு விஞ்ஞானிகளிடையே காணப்பட்டுள்ளது.

எனினும் அது வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. பூமியை அந்தக் கல் கடந்து சென்ற பின்னரே இது தொடர்பிலான தகவல்களை நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமல்லாம் 2016 தொடக்கம் தற்போது வரை வரவாற்றில் எப்போதும் இல்லாத வகையில் விண்கற்கள் பூமியை அச்சுறுத்திக் கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இருண்ட கிரகமான நிருபு சூரியக் குடும்பத்தை நெருங்கி வரும் போது விண்ணில் பாரிய மாற்றங்கள் தென்படக்கூடும் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

அந்த மாற்றங்கள் தற்போது அதிகமாக தென்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல ஆதாரங்கள் அன்றாடம் வெளிப்படுத்தப்பட்டு கொண்டே வரப்படுகின்றது.

 

பூமியில் பல்வேறு இடங்களில் இப்போது எரிகற்கள் வீழ்ந்து வருவதாகவும் அவை மக்களுக்கு தெரிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டு வருவதாகவும் ஆங்கில ஊடக செய்திகள் கூறுகின்றன.

ஆனால் இந்தக் கிரகம் தொடர்பில் தீவிர கண்கானிப்பு தொடர்ந்து கொண்டே வருகின்றது. அவ்வாறு அது பூமியுடன் மோதினால் அதனை எதிர்கொள்வது தொடர்பாகவும் ஆய்வுகள் இடம் பெற்றவாறே இருக்கின்றன.

எவ்வாறாயினும் 450 ஆண்டுகளுக்கு முன்னர் நொஸ்டாரமஸ் எனும் தீர்க்க தரிசி கூறிய தீர்க்க தரிசனங்களே இப்போது காணக்கூடியதாக இருக்கின்றது.

2017ஆம் ஆண்டு பூமியில் பாரிய மாற்றம் ஏற்படும் எனவும் நெருப்புகற்கள் பூமிமீது அதிகமாக விழும், ஓர் மர்மக் கிரகம் பூமியை பதம் பார்க்கும் அதனால் உலக சனத்தொகை பாதியாக குறையும் என்று அவர் 450 வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

அவர் கூறியவை நிறைவேறிக்கொண்டு வந்துள்ளது. அதேபோல் இப்போதும் பூமியின் வெப்பம் காலநிலை மாற்றம் எரிகல் வீழ்ச்சி போன்ற மாற்றங்கள் அதிகமாக இடம்பெற்றவாறே இருக்கின்றது.

எவ்வாறாயினும் விஞ்ஞானிகள் இவற்றை மறைத்து வருவதற்கான காரணம் கூறப்பட வில்லை. அதன் படி 2017ல் என்ன மாற்றம் ஏற்படும்? இருண்ட கிரகம் பூமியுடன் மோதுமா என்பது மட்டும் இது வரை மர்மமே.

SHARE