பரதம் ஆடியவர் ஹீரோயின் ஆனார் 

432
பரதம் ஆடியவர் ‘நனையாத மழையே படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இதுபற்றி தயாரிப்பாளரும், இயக்குனருமான மகேந்திர பூபதி கூறியது:
காதல் தோல்வியால் பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். காதலிப்பது சாவதற்கு அல்ல, சாகும் வரை இணைந்து வாழ்வதற்குத்தான் என்ற கருவை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் அருண் பத்மநாபன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றியவர். அதேபோல் பரதம் கற்றவர் வைதேகி. இப்படம் மூலம் ஹீரோயினாக நடிக்கிறார். அனுமோகன், கோசை சிவா, கானா பாலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சவுந்தர்யன் இசை. கோவை, பொள்ளாச்சி, உடுமலை, கேரளா, அன்னூர், சாலக்குடி, மூணாறு போன்ற இடங்களில் ஷூட்டிங் நடக்கிறது.இவ்வாறு இயக்குனர் கூறினார்

SHARE