பரீட்சை சுமையை குறைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நிகழந்த சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டிற்கு புதிய கல்வி முறையை அமைப்பதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதோடு அதற்காக பிரதமர் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக கட்டமைப்பு
அத்துடன், பல்கலைக்கழக கட்டமைப்பிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் எதிர்வரும் தேர்தலுக்கு பின்னர் புதிய நாடாளுமன்றத்திற்கு கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.
அதேவேளை, 2035ஆம் ஆண்டளவில் நாட்டில் உயர் தரத்திலான கல்வி முறையை உருவாக்குவதே எமது நோக்கமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.