பருக்கள் தழும்பாக மாறுகிறதா? உதடு வெடிக்கிறதா? இதோ டிப்ஸ்

426
முகத்தில் பருக்கள் வந்தால் அது தழும்பாக மாறி முகத்தினை அசிங்கப்படுத்திவிடும்.பருக்கள் தானாகப் பழுக்கும் வரை விட்டால் முழுமையாகப் பழுத்ததும் காய்ந்து, அதன் மேலே படலம்போல் ஒட்டிக்கொண்டிருந்த தோல் வெளிப்பட்டுவிடும்.

வடு இருக்காது. கைகளால் நெருடிக் கிள்ளிவிடப்பட்ட பருவின் சீழ் அகன்றவுடன் தோலில் ஒரு பள்ளம் ஏற்பட்டு வடுவாக, நிலைத்து விடும்.

அடிக்கடி பருக்களைத் தொடுவதாலும் அழுத்துவதாலும் அவை பெருத்து ஆழமாக ஆகிவிடுவதும் உண்டு. பருக்களைக் கிள்ளுவது தவறு. நெருடாமல், தொடாமல் இருந்தால் பருக்கள் வடுவின்றித் தாமே மறைந்துவிடும்.

டிப்ஸ்:

இனிப்பு பண்டங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகள், சொக்லேட்டினை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

குளிக்கும்போது உடலைத் தினமும் ஈரிழைத் துண்டால் அழுத்தித் தேய்த்துக் குளிப்பது நல்லது.

முகத்தையும் ஈரிழைத் துண்டால் தேய்த்துவிடுவதால் வியர்வைக் கோளங்களைச் சுற்றியுள்ள தசைகள் வலுவுற்று துவாரங்கள் அதிகம் பெருக்காமலும், கொழுப்பின் கசிவு, அழுக்கு தங்காமலும் அழற்சி அடையாமலும் பாதுகாக்க முடியும்.

உதடு வெடிக்கிறதா?

குளிர்காலம் நெருங்கிவிட்டால் சளி இருமல் போன்ற பிரச்சனைகளால் அல்லல்படுவது போன்று உதடு வெடிப்பு பிரச்சனையாலும் அவதிப்படுவோம்.

உதடு வெடித்து எரிச்சல் ஏற்படுவதால் நம்மால் விரும்பிய உணவுகளை சாப்பிட இயலாது, அதுவும் காரமான உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது.

மேலும், பிறரோடு வாய்திறந்து பேசுவதற்கு கூட மிகவும் சிரமப்படுவோம்.

டிப்ஸ்:

1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 1 டீஸ்பூன் உப்பை கலந்து ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

பஞ்சுருண்டையை கொண்டு இந்த கலவையை உங்கள் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள்.

பின் உதட்டின் மீது விரல்களை கொண்டு வட்ட வடிவில் ஒரு நிமிடத்திற்கு மென்மையாக மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து, உங்கள் உதடு மென்மையாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

இறுதியில் ஒரு துணியை கொண்டு உதட்டை துடைத்து விட்டு அதனை காய வையுங்கள்.

SHARE