பலியான ஆடுகளைக் கண்டு; இனி பலியிடப்போகும் ஆடுகளுக்கு இன்னும் ஏன் புத்தி வரவில்லை?
இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் சாபத்தின் உச்சியில் நிற்கிறது. வெளிநாட்டுத் தீவிரவாதிகளை விட உள்நாட்டு அலசியல் தலைமகள் ஆபத்து நிறைந்தவர்களாகவே தங்களை காலத்திற்குக் காலம் மாற்றியமைத்துக்கொண்டு இனவாத அடக்குமுறையால் அலங்கரிக்கப்பட்டு எம் தமிழினம் இன்றும் கூட ஓர் மீட்பரில்லாத கோமாளிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்…
சங்கம் அமைத்து கற்பனைசெய்து தமிழனின் தன்மானம் இன்று விற்பனை செய்யுமளவிற்கு வரிசைக்கிரமமாக எமக்கு வாய்த்த அரசியல் தலைமைகள் ஆட்சி நாற்காலிகளின் பாதங்களுவி பணிவிடை செய்துகொண்டிருக்கின்றனர் இத்தனைக்கும் ஒவ்வொரு தமிழனின் வாக்குகளினாலே இவர்களை நாங்கள் தெரிவு செய்தோம் என்பதை நினைத்துக் கூட பாரத்திருக்க மாட்டார்கள்
நாம் சிந்திய இரத்தம் உலரவில்லை செந்தமிழர் வாழ்வு மலரவில்லை என்பதே தமிழர் வரலாறுகளின் தொன்மையாக பதியப்பட்டுக் கல்வெட்டுகளாக்கப்பட்டிருக்
பல நாடுகளின் துப்பாக்கிகளைக்கண்டே அடக்குமுறைக் கைதிகளாக்கப்பட்ட தமிழர் வாழ்வுரிமையில் சிறந்த மீட்பர் என போற்றபப்டும் கௌரவ அரியநாயகம் சந்திரநேரு அவர்களின் அரசியற் கொள்கையில் வளர்ந்த கௌரவ சந்திரகாந்தன் சந்திரநேரு போன்றவர்களது மீள் வருகை அம்பாறை மாhவட்டத் தமிழர் தரணியில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டுமென்பதே இங்குள்ள சகல இளைஞர்களதும் எதிர்பார்ப்பாகும்
சமூக விடியலுக்காய் களத்தில் நின்று மடிந்த உயிர்களை இயற்கை எல்லா நொடியிலும் நினைவூட்டிக்கொண்டுதான் இருக்கிறது.விடியலை அனுபவிக்கும் நாமோ இதை நினைத்துப் பார்க்க்கூட நேரமின்றி வேகவேகமாய் பயணித்துக்கொண்டிருக்கிறோம்
–அ.நிமால்