பல கோடி செலவில் உருவாகும் கங்குவா படத்தை பார்த்த சூர்யா.. படம் எப்படி இருக்கு தெரியுமா, விமர்சனம் இதோ

75

 

சூர்யா நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

பல கோடி செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திரங்கள் திஷா பாட்னி, அனிமல் பட புகழ் பாபி தியோல் இணைந்து நடிக்கிறார்கள். மேலும் யோகி பாபு, கோவை சரளா, கே.எஸ். ரவிக்குமார் போன்றார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்களாம்.

கங்குவா படத்தில் சூர்யா பல கெட்டப்புகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வெளிவந்த கிலிம்ப்ஸ் வீடியோவில் மிரட்டலான லுக்கில் இருந்தார். அதை தொடர்ந்து வெளிவந்த போஸ்டரில் மற்றொரு புதிய லுக் ஒன்றை காட்டியிருந்தனர்.

சூர்யாவின் விமர்சனம்
கங்குவா படத்தின் அவுட் எப்படி வந்துள்ளது என பார்க்க ஆவலுடன் இருந்த சூர்யா, சமீபத்தில் இப்படத்தின் ரஃப் அவுட்டை பார்த்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சிறுத்தை சிவாவை கட்டிப்பிடித்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தாராம் சூர்யா. இதில் நடிகர் சூர்யாவிற்கு பெரும் மகிழ்ச்சி என கூறப்படுகிறது.

கங்குவா படத்தை பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக சூர்யா தெரிவித்த விமர்சனம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில், இப்படத்திற்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE