பல மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த இராட்சத கடல் உயிரினம்.

296

பல வகையான உயிரினங்கள் இயற்கை சீற்றம், மற்றும் மனித செயற்பாடுகள் காரணமாக இன்று வெகுவாக அழிந்து வருகின்றன.

ஆனால் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் இயற்கை அனர்த்தங்களால் மட்டுமே அழிந்து பல்வேறு உயிரினங்களின் படிமங்கள் இன்றும் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது சுமார் 170 மில்லியன் வருடங்களுக்கு முன்னரான ஜுராஸிக் காலம் எனப்படும் டைனோசர் காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் கடல் வாழ் உயிரினம் ஒன்று தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் படிமங்கள் கடந்த கால் நூற்றாண்டு காலமாக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த போதிலும் அவ் உயிரினம் தொடர்பான எவ்விதமான ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

தற்போது இதற்கான ஆராய்ச்சிகள் ஸ்கொட்லாந்து விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் ஆதாரங்களின்படி குறித்த உயிரினமானது 4 மீற்றர்கள் நீளமுடையது எனவும் கூர்மையான வாய்ப் பகுதியைக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் டைனோசர்கள் இப் பூமியிலிருந்து அழிவதற்கு முன்னமே இவ் இராட்சத உயிரினமாது முற்றாக அழிவை சந்தித்துவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE