பல வருடங்களுக்கு பிறகு நிலக்கரி புகையிரத சேவை

737

இலங்கையில் உள்ள நீராவி புகையிரதம் ஒன்று பல வருடங்களுக்கு பிறகு கொழும்பில் இருந்து பண்டாரவளை புகையிரத நிலையம் வரை சனிக்கிழமை பயணத்தை ஆரம்பித்துள்ளது.

புகையிரதம் அறிமுகமாகி தற்போது 200ற்கும் மேற்பட்ட வருடங்களாகிறது. புகையிரதம் ஆரம்பத்தில் நிலக்கரி மூலம் நீராவி புகையிரதமாக இயங்கியது.

https://www.youtube.com/watch?v=C_kljDU0Hzk

இலங்கையில் உள்ள நீராவி புகையிரதம் ஒன்று பல வருடங்களுக்கு பிறகு கொழும்பில் இருந்து பண்டாரவளை புகையிரத நிலையம் வரை பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த புகையிரதத்தில் செல்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டுவது சுட்டிக்காட்டதக்கதாகும்.

அந்தவகையில் சனிக்கிழமை பயணித்த புகையிரதத்தில் சுற்றுலா பயணிகளும் சென்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய காலகட்டத்தில் இயங்கும் புகையிரத்தில் சாரதிகளுக்கு பல வசதிகள் இருந்தாலும் அக்காலத்தில் இயங்கிய நீராவி புகையிரதத்தில் சாரதிகளுக்கு எந்தவிதமான வசதிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பயணித்த இந்த புகையிரதம் ஹற்றன் புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது அதிகளவான மக்கள் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE