பஸ் சில்லில் சிக்குண்டு பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு

253

பஸ் சில்லில் சிக்குண்டு பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த  சம்பவமொன்று ஹக்மன பகுதியில் இன்று முற்பகல் 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஹக்மனயிலிருந்து மாத்தறை நோக்கி சென்ற தனியார் பஸ் வண்டியில் பயணித்த  பெண்ணொருவர் கொங்கல தாஹிலிகடே  சந்தியில் பஸ்  நிறுத்தப்பட்டதும் அதிலிருந்து இறங்கி செல்ல  முற்பட்ட வேளையிலேயே பஸ்சின் முன்சில்லினுள் அகப்பட்டு   ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஹக்மன பகுதியை சேர்ந்த 66 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹக்மன பொலிசார் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE