பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷாரப் வைத்தியசாலையில் அனுமதி

462

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷாரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பின் உடல்நிலை மோசமடைந்ததால் நேற்று அவரை துபாயில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் துபாயில் வசித்துவருகிறார். இவர் மீது ராஜ துரோகம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக 2016ஆம் ஆண்டு துபாய்க்கு சென்றார். ஆனாலும் அவர் யாருடனும் பேசவோ, சந்திக்கவோ கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அவரது நரம்புகள் வலுவிழந்தமையால், நிற்பதற்கும், நடப்பதற்கும் சிரமப்பட்டு வந்தார்.

இந்நிலையில், அவர் உடல்நிலை காரணமாக பாகிஸ்தானுக்கு செல்லமுடியாத நிலையில் இருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, ஜூன் 12ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் நேற்று அவர் துபாயில் உள்ள வைத்தியசாலையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

SHARE