பாகிஸ்தானின் லாகூரில் மசூதி அருகே குண்டுவெடிப்பு 5 பேர் பலி

173

பாகிஸ்தானின் லாகூரில் அமைச்துள்ள சூபி மசூதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பொலிஸார் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சூபி மசூதியில் இன்று காலை வழக்கமான தொழுகை நடைபெற்ற நிலையில் மசூதிக்கு வெளியே பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது, பொலிஸாரின் வாகனம் அருகே திடீரென குண்டு வெடித்தது. இதில் பொலிஸ் வாகனம் கடுமையாக சேதமடைந்தது.

இந்த தாக்குதலில் 3 பொலிஸார் உட்பட 5 பேர் பலியானதாக தகவல் வெளியாகிவுள்ள நிலையில் . 24 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அங்கு கூடுதல் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE