பாகிஸ்தானில் ராணுவம் விமான தாக்குதல்: 17 போராளிகள் சாவு

449
பாகிஸ்தானில் போராளிகள் ஆதிக்கம் நிறைந்த வடக்கு வசிரிஸ்தானி ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போராளிகளின் மறைவிடம் மீது தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தப்படுவதால் அங்கிருந்து சுமார் 5 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் தர்காமண்டி, சாஷ்மா காவோன் ஆகிய பகுதிகளில் போராளிகளின் மறைவிடம் மீது இன்று ராணுவ விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. இதில், 6 வீடுகள் தகர்க்கப்பட்டதாகவும், 17 போராளிகள் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை 370 போராளிகளும், 12 பாதுகாப்பு படை வீரர்களும் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

SHARE