பாகிஸ்தான் – இலங்கை நட்புறவு கிண்ணம் கொழும்பில் ஆரம்பமானது !

32

 

நூருல் ஹுதா உமர்

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பினால் 2014 ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ச்சியாக 10வது வருடமாகவும் நடைபெற உள்ள 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் மூத்த உதைபந்தாட்டப் போட்டியானது 10 வது ஆண்டை முன்னிட்டு பாகிஸ்தான் – இலங்கை நட்புறவு கிண்ணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் 24 முன்னணி அணிகள் பங்குபற்ற உள்ளதோடு, இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் வீரர்களும் அந்த விளையாட்டுக் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றியுள்ளனர்.

கொழும்பு 13, கொட்டாஞ்சேனை ரத்தினம் மைதானத்தில் நடைபெற உள்ள இந்தப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான நட்புறவை ஆதரிப்பதே இந்த போட்டியின் நோக்கம் என்றும், இந்த போட்டியை காண விளையாட்டு ரசிகர்களை ஒன்றிணைந்து தங்கள் ஆதரவை தெரிவிக்குமாறும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சிரேஷ்ட பிரதி தலைவர் மௌலவி ஐ.எம்.எம். மிப்லால், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான பொருளாளர் ஐ.ஏ. கலீலுர்ரஹ்மான், தலைமைத்துவ சபை உறுப்பினர் எஸ்.எம்.முஸம்மில், கூட்டமைப்பின் பிரச்சார செயலாளர் எம்.பி.காதர் உட்பட கழகங்களின் பிரதானிகள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

SHARE