பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் மீது கொலை வழக்கு பதிவு: கோர்ட்டு உத்தரவு

428

பிரதமர் நவாஸ் செரீப், பஞ்சாப் முதல்–மந்திரியும் அவரது தம்பியுமான ஷாபாஸ் செரீப் ஆகியோர் தூண்டுதலின் பேரில் இச்சம்பவம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

எனவே, நவாஸ் செரீப் அவரது தம்பி ஷாபாஸ் செரீப் உள்ளிட்ட 19 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யும்படி லாகூர் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யும்படி போலீசுக்கு உத்தரவிட்டது.

அதை எதிர்த்து லாகூர் ஐகோர்ட்டில் மந்திரிகள் பெர்வைஷ் ரஷீத், ஹவா ஜாசாத் ரபிக், அபித்ஷெர்அலி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதன் மீது நேற்று தீர்ப்பளித்தது. பிரதமர் நவாஸ் செரீப் அவரது தம்பி ஷாபாஸ் செரீப் உள்ளிட்ட 19 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய செசன்சு கோர்ட்டு அளித்த தீர்ப்பை ஏற்று கொள்வதாக அறிவித்தது.

இந்த வழக்கில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை மனுதாரர்கள் நிரூபிக்க தவறிவிட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE