பாக்கியலட்சுமி சீரியல் : இரண்டாம் முறை கர்ப்பமான ராதிகா! தாத்தாவான பின் மீண்டும் தந்தையான குஷியில் கோபி

100

 

பாக்கியலட்சுமி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் முன்னணியில் இருக்கிறது. டாப் 5 TRP ரேட்டிங்கில் இடம்பிடித்துள்ள இந்த சீரியலில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் நடந்துள்ளது.

பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு, ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் கோபி. இதன்பின் பல பிரச்சனைகள் நடந்தது. வீட்டை விட்டு வெளியேறிய கோபி தற்போது மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு ராதிகாவுடன் வந்துவிட்டார்.

கர்ப்பமான ராதிகா
இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் ஏற்கனவே பேரன், பேத்தி எடுத்து தாத்தாவான கோபி, தற்போது மீண்டும் தந்தையாக போகிறார். ஆம், ராதிகா இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.

ஏற்கனவே ராதிகா, ஸ்ருதி எனும் ஒரு மகள் இருக்க தற்போது இரண்டாம் முறையாக கற்பமாகியுள்ளார். இந்த செய்தியை கோபியிடம் முதல் முறையாக ராதிகா சொன்னவுடன் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார் கோபி. பின் அய்யய்யோ என ஷாக்காகி உறைந்துவிட்டார். இதுவே இன்றைய எபிசோடில் ஒளிபரப்பானது.

SHARE