பாட­சா­லை­க­ளில் நிறு­வ­னங்­க­ளின் புத்­த­கங்­கள் ,வெளி­யீ­டு­கள் விற்­பனை செய்­ய முற்­றாக தடை

243

வடக்கு மாகாண பாட­சா­லை­க­ளில் நிறு­வ­னங்­க­ளின் புத்­த­கங்­கள் ,வெளி­யீ­டு­கள் நேர­டி­யாக விற்­பனை செய்­யப்­ப­டு­வது முற்­றாக தடை செய்­யப்­பட்­டுள்­ளது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பான சுற்­ற­றிக்கை கல்வி சார்ந்த சகல உயர் அதி­கா­ரி­க­ளுக்­கும் கல்வி அமைச்­சால் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளதாக தெரி­விக்­கப்­பட்­டது.

இது தொடர்பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டதா­வது:

வடக்கு மாகாண பாட­சா­லை­க­ளில் பல்­வேறு நிறு­வ­னங்­க­ளின் வெளி­யீ­டு­கள் ,புத்­த­கங்­கள் விற்­பனை செய்­யப்­ப­டு­கி­றன.

இது பாட­சா­லை­க­ளில் அதி­கமாக நடை­பெ­று­கி­றது.இந்த வெளி­யீ­டு­கள் சில வேளை­க­ளில் பாட பரப்­புக்கு மேல­தி­க­மாக மாண­வர்­க­ளுக்கு சுமை­யா­க­வும் அமை­கி­றது.கல்வி அமைச்சு ஆசி­ரி­யர் கைநூல் உட்பட்ட அனைத்து புத்­த­கங்­க­ளை­யும் மாண­வர்­க­ளின் கல்வி மட்­டத்­துக்கு ஏற்ப அச்­சிட்டு வெளி­யி­டு­கி­றது.சில பாட­சா­லை­க­ளில் இந்த வெளி­யீட்டு நிறு­வ­னத்­தின் புத்­தகங்­களை வாங்­கு­மாறு சிலர் மாண­வர்­க­ளுக்கு தெரி­விக்­கின்­ற­னர்.

கல்வி அமைச்சு கல்வி திணைக்­க­ளத்­தால் போதி­ய­ளவு பயிற்சி மீட்­டல்­கள், பரீட்­சைக்கு தயார்படுத்­தல் வினாக்­கள் போன்­றன வெளி­யீடு செய்­யப்படு­கின்­றன.இவை மாண­வர்­க­ளுக்கு போது­மா­ன­தாக அமை­கி­றது.

ஆகவே வடக்கு மாகாண பாட­சா­லை­க­ளில் அர­சால் வெளி­யி­டப்­ப­டும் வெளி­யீ­டு­களை தவிர நிறு­வ­னங்­களால் வெளி­யி­டப்­ப­டும் புத்­த­கங்­கள் மற்றும் வெளி­யீ­டு­கள் நேர­டி­யாகப் பாட­சா­லை­க­ளில், முன்­பள்­ளி­க­ளில் விற்­பனை செய்­யப்­ப­டு­வது தடை செய்­யப்­ப­டு­கி­றது.இந்த நட­வ­டிக்கை உட­ன­டி­யாக நடை­மு­றைக்கு வரு­கின்­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

SHARE