பாடசாலை வரைப்படத்துடன் பெண்ணொருவர் கைது

210

தம்புள்ளையில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பின் போது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யும் போது குறித்த பெண்ணிடம், RPG தோட்டாக்களுக்கு பயன்படுத்தப்படும் பகுதி ஒன்றும், மோட்டார் குண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் 4 பகுதிகளும், பாடசாலை மற்றும் ஹோட்டல் என்பனவற்றின் வரைப்படம் மற்றும் துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.

மடாடுகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் தம்புளை முகாமிற்கு கிடைத்த தகவல்களுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE