விஜய் டிவியில் காலை முதல் இரவு வரை நிகழ்ச்சிகள் வந்தாலும் அதிகம் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அதிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு மக்கள் பெரிய வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
அப்படி பல வருடங்களாக 8 மணி ஸ்லாட்டில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். 4 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பான தொடர் முடிவுக்கு வர இரண்டாம் பாகம் அண்மையில் தொடங்கப்பட்டது.
இதில் சில புதுமுகங்களும், பழைய முகங்கள் பலரும் நடிக்கிறார்கள். கதைக்களத்தில் இப்போது தான் கொஞ்சம் விறுவிறுப்பு இருக்கிறது.
புதிய என்ட்ரி
இப்போது கதையில் சரவணனுக்கு பெண் கிடைக்காமல் குடும்பமே என்னென்னவோ செய்கிறார்கள். இந்த நிலையில் தான் சீரியல் குறித்து வந்த புதிய புரொமோவில் பிரபல சீரியல் நடிகை சரண்யா என்ட்ரி கொடுக்கிறார்.
அவரது என்ட்ரியை பார்த்த ரசிகர்கள் சூப்பர் இனி தொடர் சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.