பாதசாரிகள் தானியங்கி கார்களுடன் மோதி விபத்துக்குள்ளாவதை தடுக்க புதிய ஆப்ஸ்

288

கூகுள் உட்பட சில முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் தானியங்கி கார்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றமை அறிந்ததே.

இவ்வாறிருக்கையில் கூகுள் நிறுவனம் தனது காரினை பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுத்தியபோது பல தடவைகைள் விபத்துக்குள்ளாகியிருந்ததாக தகவல் வெளியிட்டிருந்தது.

எனவே தானியங்கி கார்கள் விபத்துக்குள்ளாவதை தற்போதைய தொழில்நுட்பத்தில் 100 சதவீதம் தடுக்க முடியாது என்பதை கூகுள் நன்கறிந்துள்ளது.

இதனால் இவ் வகை கார்களிடமிருந்து பாதசாரிகள் தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான புதிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை கூகுள் உருவாக்கியுள்ளது.

Patent App எனும் குறித்த அப்பிளிக்கேஷன் ஆனது பாதசாரி விபத்துக்குள்ளாகப் போகும் சந்தர்ப்பத்தில் சமிக்ஞையினை விசேட இலத்திரனியல் சாதனத்திற்கு அனுப்புகின்றது.

இதன்போது காரின் முன் பகுதியில் (Hood) பசை (Glue) விடுவிக்கப்படுகின்றது.

பாதசாரி விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பத்தில் அவர் பசையின் உதவியுடன் காரின் முன் பகுதியின் மேல் ஒட்டப்படுகின்றார்.

இதன்போது அவருக்கும் தரைக்கும் இடையிலான தொடுகை அற்றுப்போகின்றது. எனவே விபத்தின்போது பாரிய காயங்கள் ஏற்படுவதிலிருந்து பாதசாரி பாதுகாக்கப்படுவார்.

SHARE