பாரதிராஜா மகனும், பிரபல நடிகருமான மனோஜ் பாரதிராஜாவிற்கு இவ்வளவு பெரிய மகள்களா?- அழகிய குடும்ப போட்டோ

65

 

பாரதிராஜா இவருக்கு தமிழ் சினிமாவில் அறிமுகமே தேவையில்லை.

1977ம் ஆண்டு 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கண்டார், இந்த படத்தை தமிழக மக்களாலும் மறக்க முடியாது.

இப்படத்தை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக் போன்ற படங்கள் எல்லாம் செம ஹிட். பல நடிகர்களின் சினிமா பயணத்தை வெற்றிகரமாக்கிய பாரதிராஜா 1999ம் ஆண்டு தன்னுடைய மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய படம் தாஜ்மஹால்.

அப்படத்திற்கு பிறகு தொடர்ந்து படங்கள் நடித்தாலும் பெரிய அளவில் வெற்றி காணவில்லை.

குடும்பம்
நடிகர் மனோஜ் பாரதிராஜா, சாதுரியன் படத்தில் நடிக்கும் போது உடன் நடித்த நடிகை நந்தனாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் அவரையே திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு மதிவதனி மற்றும் அர்த்திகா என 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மனோஜ் பாரதிராஜா தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

SHARE